IND vs SL : இப்படி கஷ்டமா இருக்கும்னு நாங்க யோசிக்கல. இந்திய அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு – தசுன் ஷனகா வருத்தம்

Shanaka
- Advertisement -

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் ஃபோர் சூட்டில் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற இந்திய அணியானது நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியும் 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 49.1 ஓவரில் 213 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது துவக்கத்திலிருந்தே இந்திய அணியின் பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறியது.

- Advertisement -

இறுதியில் 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 41 வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில் :

இந்த போட்டியில் மைதானம் இப்படி இருக்கும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. நாங்கள் இதனை ஒரு பேட்டிங் விக்கெட் என்று நினைத்தோம். அதேபோன்று இந்த மைதானத்திற்கு ஏற்ப பேட்டிங்கையும் மாற்றி விளையாடினோம். ஆனாலும் எங்களால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. துனித் வெல்லாலகே இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அவர் அசத்தலாக செயல்பட்டார். அதேபோன்று தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் அசலங்கா ஆகியோரும் அருமையாக செயல்பட்டனர். வலைப்பயிற்சியில் எப்போதுமே அவர்கள் இருவருமே சிறப்பாக செயல்படுவார்கள். அந்த வகையில் இன்றைய போட்டியில் அவர்களது பந்துவீச்சும் சிறப்பாக அமைந்தது.

இதையும் படிங்க : IND vs SL : 213 ரன்களே அடித்திருந்தாலும் இலங்கை அணியை சுருட்ட இதுவே காரணம் – ரோஹித் சர்மா மகிழ்ச்சி

கடந்த போட்டியிலேயே வெல்லாலகே சிறப்பாக பந்துவீசி இருந்தார். அதனால் இன்று ஏதாவது ஸ்பெஷலாக செய்வார் என்று நான் கருதுகிறேன். அந்த வகையில் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்த போது அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்பதை உணர்ந்தேன். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் மேலும் சில விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என தசுன் ஷனகா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement