2வது டெஸ்ட்: பிங்க் டெஸ்ட் வரலாறு, பெங்களூரு மைதானம் எப்படி, புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

INDvsSL
- Advertisement -

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 12-ஆம் தேதியன்று பெங்களூருவில் நடைபெற உள்ளது. மதியம் 2 மணிக்கு பகலிரவாக துவங்கும் இப்போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவும் இலங்கையும் ஒரு பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடி சரித்திரம் படைக்க உள்ளன.

INDvsSL

- Advertisement -

முன்னதாக மொஹாலியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் ஒரு வைட்வாஷ் வெற்றியை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிங்க் டெஸ்ட் வரலாறு:
1. வரலாற்றில் இந்தியாவும் இலங்கையும் இதுவரை 45 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 21 போட்டிகளில் இந்தியாவும் 7 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளது. 17 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

Pink-ball

2. கடந்த 2015 முதல் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் வரலாற்றிலேயே முதல்முறையாக இப்போது தான் ஒரு பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்த 2 அணிகளும் நேருக்கு நேர் மோத உள்ளன.

- Advertisement -

3. இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2019ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா ஒரு பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. வெறும் 3 நாட்களில் முடிந்த அந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Rahane

4. இருப்பினும் அதன்பின் கடந்த 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் அந்த அணிக்கு எதிராக நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா வரலாற்றிலேயே தனது மிகக்குறைந்த டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்து படு மோசமான தோல்வியை சந்தித்தது இந்திய ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது. அதன்பின் 2021இல் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்னில் நடந்த ஒரு பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

- Advertisement -

5. மறுபுறம் இலங்கை அணியைப் பொறுத்தவரை இதற்கு முன் 3 பகலிரவு போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளையும் 1 தோல்வியையும் பதிவு செய்துள்ளது.

virat

6. பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக விராட் கோலி 242 (3 போட்டிகள்) ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதேப்போல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் மற்றும் ஒரே இந்தியராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். 136 ரங்கள், வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா, 2019.

- Advertisement -

7. பிங்க் நிற பந்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலராக ரவிச்சந்திரன் அஸ்வின் 12 விக்கெட்டுகளுடன் (3 போட்டிகள்) முதலிடம் பிடித்துள்ளார்.

ashwin 1

8. இதற்கு முன் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்தியர்களாக இஷாந்த் ஷர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் பெருமை பெற்றுள்ளனர்.

பெங்களூரு மைதானம்:
1. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் வரலாற்றில் முதல்முறையாக இப்போதுதான் ஒரு பிங்க் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதற்கு முன் இங்கு நடந்த 23 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா 6 தோல்விகளை பெற்றுள்ளது. 9 போட்டிகள் டிராவில் முடிந்தன.

sachin

2. இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 869 ரன்களுடன் ( 9 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார்.

3. அதேபோல் பெங்களூர் மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக ஜாம்பவான் அனில் கும்ப்ளே 9 போட்டிகளில் 41 விக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

RCB

வெதர் – பிட்ச் ரிப்போர்ட்:
இந்த போட்டி நடைபெறும் பெங்களூரு நகரில் போட்டி நாட்களில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. இருப்பினும் பகலிரவு போட்டி என்பதால் இரவு நேரங்களில் பனியின் தாக்கம் இருக்கலாம்.

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானம் எப்போதுமே முதல் 3 நாட்கள் பேட்டிங்க்கு சாதகமாகவும் கடைசி 2 நாட்கள் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வருவதை பார்த்துள்ளோம். இருப்பினும் ஆரம்ப நாட்களில் பிட்சில் லேசான புற்கள் இருக்கும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம். அதேப்போல் கடைசி 2 நாட்களில் இங்கு சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 362, சராசரி 2-வது இன்னிங்ஸ் ஸ்கோர் 314, சராசரி 3-வது இன்னிங்ஸ் ஸ்கோர் 204, சராசரி 2-வது இன்னிங்ஸ் ஸ்கோர் 183 ஆகும். மேலும் இப்போட்டி பகல் இரவாக நடப்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானிப்பது வெற்றிக்கு ஆரம்பத்திலேயே வித்திடலாம்.

Advertisement