IND vs SL : தொடரை வெல்லுமா இந்தியா, 2வது போட்டி நடைபெறும் புனே மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

MCA Cricket Stadium Ground Pune
- Advertisement -

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் இந்தியா முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி முதல் போட்டியில் பேட்டிங்கில் 94/5 என தடுமாறிய போது கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்டு 162 ரன்கள் குவித்தது. அதே போல் பந்து வீச்சில் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை எடுத்து மிடில் ஓவர்களில் தடுமாறினாலும் கடைசி நேர பரபரப்பில் கச்சிதமாக செயல்பட்ட இந்தியா புத்தாண்டை வெற்றியுடன் துவங்கியது.

அந்த நிலையில் அதே புத்துணர்ச்சியுடன் ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் 2வது போட்டியிலும் வென்று 2 – 0 (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரின் கோப்பையை வெல்ல இந்தியா போராடவுள்ளது. அதற்கு முதல் போட்டியை போலவே சவாலை கொடுக்க இலங்கையும் காத்திருப்பதால் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கப்போகும் இப்போட்டி புனேவில் இருக்கும் எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த 2012 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வரும் இம்மைதானத்தில் இதுவரை வரலாற்றில் 3 போட்டிகள் நடைபெற்றுள்ளது.

- Advertisement -

புனே மைதானம்:
முதலாவதாக கடந்த 2012இல் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியாவை 2016இல் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை தோற்கடித்தது. இருப்பினும் கடைசியாக 2020இல் மீண்டும் இலங்கையை சந்தித்து 78 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்ற இந்தியா இம்மைதானத்தில் நல்ல செயல்பாடுகளையே வெளிப்படுத்தியுள்ளது. இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக ஷிகர் தவான் (61) உள்ளார்.

1. இங்கு டி20 கிரிக்கெட்டில் எந்த பேட்ஸ்மேனும் இதுவரை சதமடித்ததில்லை என்ற நிலையில் இந்தியா சார்பில் சிகர் தவான் மற்றும் ராகுல் ஆகியோர் தலா 1 அரை சதங்கள் எடுத்துள்ளனர். இந்த மைதானத்தில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலர்களாக அஸ்வின், யுவராஜ் சிங், நவ்தீப் சைனி (தலா 2) உள்ளனர்.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் டி20 போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி : இந்தியா – 201/6, இலங்கைக்கு எதிராக, 2016. இந்த மைதானத்தில் வெற்றிகரமாக அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்த அணி : இந்தியா – 158, இங்கிலாந்துக்கு எதிராக, 2012.

பிட்ச் ரிப்போர்ட்:
கருப்பு களிமண் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புனே மைதான பிட்ச் எப்போதும் சரிசமமான பவுன்ஸ் இருப்பதற்கு உதவுவதால் இம்மைதானத்தில் நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை குவிக்கலாம். அதே சமயம் இங்குள்ள கருப்பு மண்ணிலான பிட்ச் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான உதவிகளை செய்யும்.

- Advertisement -

அதே போல் இம்மைதானம் திறந்த வெளியாக இருப்பதால் இயற்கையாகவே இருக்கும் நல்ல காற்றோட்டம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு புதிய பந்தை ஸ்விங் செய்து ஆரம்பத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்த நிச்சயமாக உதவும். இம்மைதானத்தில் சர்வதேசப் போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 153 ஆகும். இருப்பினும் அது 3 வருடங்களுக்கு முன்பாக நடைபெற்றது என்பதால் கடைசியாக இங்கு நடைபெற்ற 13 ஐபிஎல் போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 171 ஆகும்.

அதனால் பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளுக்கும் கை கொடுக்கக்கூடிய இந்த மைதானத்தில் திறமையை வெளிப்படுத்துபவர்கள் அசத்தலாம். இருப்பினும் இந்த மைதானத்தின் பவுண்டரி எல்லைகள் மிகவும் சிறியது என்பதால் பவுலர்களை விட பேட்ஸ்மேன்கள் சற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்தி அதிரடியாக ரன்களைக் குவிப்பார்கள். மேலும் இப்போட்டி இரவு நேரத்தில் நடைபெறும் என்பதால் பனியின் தாக்கத்தை கருதி டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீசத் தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

இதையும் படிங்கவீடியோ : வங்கதேச தோல்வியை மறக்க முடில அதான் நானே களத்தில் குதிச்சுட்டேன் – ரன்னிங் கேட்ச் பின்னணியை பகிர்ந்த இஷான் கிசான்

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் புனே நகரை சுற்றிய பகுதிகளில் போட்டி நாளன்று மழைக்கான வாய்ப்பு வெறும் 10% இருக்கும் எனவும் வானம் இரவு நேரத்தில் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இந்திய மாநில மையம் தெரிவிக்கிறது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

Advertisement