வீடியோ : வங்கதேச தோல்வியை மறக்க முடில அதான் நானே களத்தில் குதிச்சுட்டேன் – ரன்னிங் கேட்ச் பின்னணியை பகிர்ந்த இஷான் கிசான்

Advertisement

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களுக்கு பதில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் விளையாடும் இத்தொடரில் ஜனவரி 3ஆம் தேதியன்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 162/5 ரன்கள் எடுத்தது.

SHivam mavi IND vs SL

அதிகபட்சமாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் 98/5 என இந்தியாவை கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி காப்பாற்றிய தீபக் ஹூடா 41* (23) ரன்களும் அக்சர் படேல் 31* (20) ரன்களும் ஆரம்பத்திலேயே இஷான் கிசான் 37 (29) ரன்களும் எடுத்தனர். அதை தொடர்ந்து 163 ரன்களை துரத்திய இலங்கையும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்து 68/5 என தடுமறியது. இருப்பினும் மிடில் ஆர்டரில் கேப்டன் தசுன் சனாகா 45 (27) ரன்களும் வணிந்து ஹசரங்கா 21 (10) ரன்களும் அதிரடியாக எடுத்ததால் வெற்றியை நெருங்கிய அந்த அணிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

வங்கதேச தோல்வி:
அப்போது கடைசி நேரத்தில் 23* (16) ரன்கள் எடுத்த சமிக்கா கருணரத்னே கடைசி ஓவரில் 10 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால் இலங்கை போராடி தோற்றது. முன்னதாக இப்போட்டியில் உம்ரான் மாலிக் வேகத்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்த இலங்கை வீரர் அசலங்கா விளாசிய பந்து நேராக கேட்ச்சாக மாறி தேர்ட் மேன் திசையில் சென்றது. அங்கு அதைப் பிடிக்க வேண்டிய ஹர்ஷல் படேல் காத்திருந்தாலும் ஆரம்பத்திலேயே பந்தில் கண்ணை வைத்த விக்கெட் கீப்பர் கிசான் கிசான் பல அடி தூரங்கள் வேகமாக ஓடிச் சென்று பவுண்டரியின் அருகே பைன் லெக் பகுதியில் பந்து கீழே வந்த போது டைவ் அடித்து அற்புதமான கேட்ச் பிடித்தார்.

கடந்த 2018இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக புனேவில் நடந்த ஒரு போட்டியில் முன்னாள் கேப்டன் தோனி பிடித்தது போலவே மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அவர் ரசிகர்களின் பாராட்டு மழையிலும் இணைந்தார். இந்நிலையில் ஹர்ஷல் படேலுக்கு சென்ற கேட்ச்சை நீங்கள் ஏன் நான் பிடித்துக் கொள்கிறேன் என்று சைகை செய்து வேண்டுமென்றே பிடித்தீர்கள் என இஷான் கிஷானிடம் போட்டியின் முடிவில் இந்திய பீல்டிங் பயிற்சியாளர் டி திலிப் பாராட்டுடன் கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

அதற்கு சமீபத்திய வங்கதேச ஒருநாள் தொடரில் இது போன்ற முக்கிய நேரத்தில் விட்ட சில கேட்ச்கள் 2 – 1 (3) என்ற கணக்கில் அவமான தோல்வியை பரிசளித்ததால் தமக்கு கிடைத்த வாய்ப்பில் சொதப்பல் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த கேட்ச் பிடித்ததாக இசான் கிசான் கூறினார். குறிப்பாக முதல் போட்டியிலேயே விக்கெட் கீப்பரான கேஎல் ராகுல் எளிதான கேட்ச் விட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அது போன்ற நிலைமை ஏற்படக்கூடாது என்பதாலேயே அவ்வாறு செயல்பட்டதாக தெரிவித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“வங்கதேசத்தில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம் என்று நினைக்கிறேன். அத்தொடரில் சில கேட்ச்கள் தவறான அழைப்புகள் காரணமாக நாம் தவற விட்டோம். அதாவது யார் பிடிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டதால் கேட்சுகளை தவற விட்டோம். எனவே நான் கேட்ச் பிடிக்க செல்கிறேன் என்று முன்கூட்டியே தெரிவித்தால் எந்த குழப்பமும் என்பதற்காகவே முன்கூட்டியே அழைத்தேன்”

- Advertisement -

“பயிற்சி செய்யும் போது கூட நான் இதைப்பற்றி பயிற்சியாளர்களிடம் விவாதித்துள்ளேன். மேலும் பயிற்சியின் போது டென்னிஸ் பந்துகளை மிகவும் உயரத்திற்கு போட்டு அதைப் பிடிக்கும் பயிற்சிகளையும் நாங்கள் எடுத்தோம். அது நல்ல பலனை கொடுத்துள்ளது” என்று கூறினார்.

KL Rahul catch

இதையும் படிங்க2024 டி20 உ.கோ’க்கு சரியான கேப்டன் என்பதை நிரூப்பிக்கும் பாண்டியா – ஆரம்பத்திலேயே ரோஹித்தை மிஞ்சி புதிய சூப்பர் சாதனை

அதை கேட்டு மகிழ்ச்சியடைந்த பயிற்சியாளர் ஓடிக் கொண்டிருக்கும் போது கேட்ச் பிடிப்பது மிகவும் கடினமானது என்றும் அதை நீங்கள் சிறப்பாக செய்தீர்கள் என்றும் பாராட்டினார்.

Advertisement