2024 டி20 உ.கோ’க்கு சரியான கேப்டன் என்பதை நிரூப்பிக்கும் பாண்டியா – ஆரம்பத்திலேயே ரோஹித்தை மிஞ்சி புதிய சூப்பர் சாதனை

Hardik Pandya and Rohit Sharma
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2023 புத்தாண்டை வெற்றியுடன் துவக்கியுள்ளது. ஜனவரி 3ஆம் தேதியன்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 162/5 ரன்கள் சேர்த்தது. சுப்மன் கில் 7, சூரியகுமார் யாதவ் 7, சஞ்சு சாம்சன் 5 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய இந்திய அணிக்கு அதிகபட்சமாக தீபக் ஹூடா 41* (23), இஷான் கிசான் 37 (29), கேப்டன் ஹர்டிக் பாண்டியா 29 (27) என எஞ்சிய வீரர்கள் போராடி தேவையான ரன்களை அடித்தனர்.

IND vs SL Surya

- Advertisement -

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு நிஷாங்கா 1, டீ சில்வா 8, அஸலங்கா 12, ராஜபக்சா 10, குசால் மெண்டிஸ் 28 என முக்கிய பேட்ஸ்மேன் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். இருப்பினும் மிடில் ஆர்டரில் வணிந்து ஹசரங்கா அதிரடியாக 21 (10) ரன்களும் கேப்டன் சனாக்கா 45 (27) ரன்களும் எடுத்து போராடி அவுட்டானார்கள். அதனால் வெற்றியை நெருங்கிய இலங்கைக்கு அக்சர் படேல் வீசிய கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது 23* (16) ரன்கள் குவித்து போராடிய சமிக்கா கருணரத்னே 10 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா திரில் வெற்றி பெற்றது.

சரியான பாண்டியா:
முன்னதாக இப்போட்டியில் 94/5 என பேட்டிங்கில் தடுமாறிய போது தீபக் ஹூடா, அக்சர் படேல் ஆகியோர் காப்பாற்றிய நிலையில் பந்து வீச்சில் அறிமுகமாக களமிறங்கிய சிவம் மாவி 4 விக்கெட்டுகளையும் வேகத்தில் மிரட்டிய உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர். மேலும் சமீப காலங்களில் ரோகித் சர்மா தலைமையில் முதன்மை நட்சத்திர வீரர்கள் அடங்கிய இந்திய அணி எதிரணியின் 1 விக்கெட்டை கூட எடுக்க முடியாமல் திண்டாடிய கதைகளால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.

Shivam Mavi

அந்த நிலையில் அளவில் சிறியதாகவும் பேட்டிங்க்கு சாதகமாகவும் கருதப்படும் மும்பை வான்கடே மைதானத்தில் 162 ரன்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய இந்தியா அம்மைதானத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ரன்களை கட்டுப்படுத்திய அணியாக இந்தியா சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2016இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தென்னாபிரிக்க 210 ரன்களை கட்டுப்படுத்தியதே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்த கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்க வேண்டுமென்ற ரசிகர்களின் கோரிக்கைக்கேற்ப ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் பிசிசிஐ முயற்சி சரியானதென்று நிரூபணமாகியுள்ளது. ஏனெனில் நேற்றைய போட்டியில் 3 ஓவர்களை வீசிய பாண்டியா பேட்டிங்கில் 29 ரன்களை எடுத்து தன்னுடைய முதல் வேலையான ஆல் ரவுண்டராக அசத்தினார்.

INDia Hardik pandya

அதை விட கேப்டனாக அனைத்து பவுலர்களையும் மாற்றி மாற்றி சரியாக பயன்படுத்திய அவர் கடைசி ஓவரில் தைரியமாக அக்சர் படேலை பயன்படுத்தி வெற்றியும் கண்டார். குறிப்பாக உலக கோப்பைக்கு முன்பாக கடினமான சூழ்நிலைகளை இப்போதே சந்தித்து பழக வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே கடைசி ஓவரில் அக்சர் படேலை பயன்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

- Advertisement -

அந்த வகையில் சமீப காலங்களில் பயந்து கொண்டு தடவலாக செயல்பட்ட இந்தியாவுக்கு அவரைப் போன்ற தைரியம் மிகுந்த துடிதுடிப்பாக செயல்படும் வீரர்களை கொண்ட அணி தான் 2024 டி20 உலக கோப்பையை வெல்ல தேவைப்படுகிறது. அத்துடன் 2022 ஐபிஎல் கோப்பையை வென்று இந்த நிலைமையை எட்டியுள்ள பாண்டியா இதுவரை டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை 6 போட்டிகளில் வழிநடத்தி 5 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். 1 போட்டி டையானது.

இதையும் படிங்கவீடியோ : ஃபைட்டரான உங்களை மிஸ் பன்றோம் பண்ட் – டிராவிட் உள்ளிட்ட இந்திய அணியினர் விடுத்த வாழ்த்து செய்தி இதோ

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் தோல்வியை சந்திக்கும் முன் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற ரோகித் சர்மாவின் சாதனையும் அவர் தகர்த்துள்ளார். இதற்கு முன் ரோகித் சர்மா தன்னுடைய முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்த நிலையில் இதே இலங்கைக்கு எதிராக 2018இல் நடைபெற்ற டி20 தொடரில் தன்னுடைய 5வது போட்டியில் தோல்வியை சந்தித்தார்.

Advertisement