வீடியோ : ஃபைட்டரான உங்களை மிஸ் பன்றோம் பண்ட் – டிராவிட் உள்ளிட்ட இந்திய அணியினர் விடுத்த வாழ்த்து செய்தி இதோ

Advertisement

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று கார் விபத்துக்குள்ளாகி தீவிர சிகிச்சைகளை பெற்று வருகிறார். கடைசியாக கடந்த மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் அடுத்ததாக நடைபெறும் இலங்கை தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. அந்த நிலையில் டேராடூனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர் புத்தாண்டுக்காக அதிகாலை 5.30 மணிக்கு தன்னுடைய பிஎம்டபிள்யூ காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

Pushkar 1

அப்போது தூக்க கலக்கத்தை சந்தித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதி விபத்திற்கு உள்ளானது. அந்த சமயத்தில் சாதுரியமாக செயல்பட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியே வந்த அவரை அந்த வழியாக வந்த டிரைவர் உள்ளிட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த செய்தியை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்து பிரார்த்தனை செய்த நிலையில் ஆபத்து கட்டத்தை தாண்டிய ரிஷப் பண்ட் எலும்பு முறிவு போன்ற காயங்களையும் சந்திக்கவில்லை.

- Advertisement -

சீக்கிரம் வாங்க பண்ட்:
இருப்பினும் அதிகப்படியான மேற்புற காயங்களை சந்தித்த அவர் முழுமையாக குணமடைய 6 மாதங்கள் தேவைப்படலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் வரும் பிப்ரவரியில் நடைபெறும் முக்கியமான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் 2023 ஐபிஎல் மற்றும் உலக கோப்பையிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

Rishabh Pant IND vs ENG Rohit Sharma

இருப்பினும் அவர் முழுமையாக குணமடைந்து விரைவில் வரவேண்டுமென்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்வது போலவே இந்திய அணியினரும் தங்களது அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம் என்றும் நீங்கள் பைட்டர் என்றும் ரிஷப் பண்ட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அந்த வீடியோவில் ராகுல் டிராவிட் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரிஷப் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். கடந்த ஒரு வருடமாக இந்திய டெஸ்ட் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் சிலவற்றை நீங்கள் விளையாடுவதை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. எப்போதெல்லாம் நமது அணி கடினமான சூழ்நிலைகளில் இருந்ததோ அந்த சூழ்நிலைகளிலிருந்து நமது அணியை விடுவிப்பதற்கான தன்மையை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இது போன்ற ஒரு சவால் நீங்கள் பலமுறை செய்தது போல் இதிலிருந்தும் மீண்டெழுவீர்கள் என்று எனக்கு தெரியும்” என கூறினார்.

கேப்டன் ஹர்டிக் பாண்டியா பேசியது பின்வருமாறு. “ஹாய் ரிஷப் நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். நீங்கள் ஒரு போராளியாக இருந்தீர்கள் என்று எனக்கு தெரியும். தற்சமயத்தில் நீங்கள் விரும்பியபடி விஷயங்கள் இல்லை. ஆனால் வாழ்க்கையே அது தானே. இருப்பினும் நீங்கள் எல்லா கதவுகளை உடைத்து எப்போதும் செய்தது போல் மீண்டும் வருவீர்கள். என் அன்பு வாழ்த்துக்கள் உங்களுடன் உள்ளன ஒட்டுமொத்த தேசமும் உங்கள் பின்னால் உள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் பேசியது பின்வருமாறு. “நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இப்போது நிலைமை என்னவென்று எனக்கு தெரியும். நாங்கள் உங்களை இங்கு இழந்திருக்கிறோம். நீங்கள் திரும்பி வருவதற்காக காத்திருக்க முடியாது. நீங்கள் எப்போதும் களத்தில் ஒரு போராளியாக இருந்தீர்கள். விரைவில் நீங்கள் திரும்பி வருவீர்கள் என்று எனக்கு தெரியும்” என கூறினார். இஷான் கிசான் வாழ்த்தியது பின்வருமாறு. “ஹாய் ரிஷப் நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். உங்களை இந்திய அணில் மிகவும் மிஸ் செய்கிறோம். நீங்கள் பைட்டர் என்பது எனக்கு தெரியும் இதிலிருந்து குணமடைந்து முன்பை விட வலுவாக நீங்கள் திரும்பி வருவீர்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்கஅப்டின்னா முதலில் ரிஸ்வான், பாபர் அசாமை தான் வெளியே அனுப்பனும் – ஷாஹித் அப்ரிடி அறிவிப்பை கலாய்க்கும் ரசிகர்கள்

சுப்மன் கில் கூறியது பின்வருமாறு. “இந்திய அணியின் சார்பில் நீங்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நீங்கள் இதை கடந்து வருவீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். உங்களை விரைவில் பார்க்க காத்திருக்கிறேன்” என்று கூறினார். சஹால் கூறியது பின்வருமாறு. “ஹாய் ரிஷப் சீக்கிரம் குணமடைந்து வாருங்கள் ப்ரோ. உங்களை மிஸ் செய்கிறோம். விரைந்து வாருங்கள் நீங்களும் நானும் சேர்ந்து பேட்டிங்கில் பவுண்டரிகளை பறக்க விடுவோம்” என்று கூறினார். அவருடன் இதர வீரர்களும் தங்களது மனதார வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Advertisement