இந்தியா – தென்ஆப்பிரிக்கா டி20 : தொடரை வெல்லப்போவது யார், முன்னோட்டம் – வரலாற்று புள்ளிவிவரம் இதோ

Ind vs SA Temba Bavuma Pant
- Advertisement -

கடந்த 2 மாதங்களாக பரபரப்பான திரில் போட்டிகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐபிஎல் தொடர் நிறைவு பெற்றதை அடுத்து இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 9-ஆம் தேதி துவங்குகிறது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் வெற்றியை சுவைப்பதற்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த தொடர் முழுவதும் ரசிகர்களுக்கு பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் விருந்தாக அமையும் என்று நம்பலாம். அதற்காக முதல் போட்டி நடைபெறும் டெல்லியில் இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

INDvsRSA

- Advertisement -

இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் காயத்தால் விலகியதால் ரிஷப் பண்ட் கேப்டனாக தலைமையில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய வீரர்களுடன் இந்தியா களமிறங்குகிறது. அதேபோல் தெம்பா பவுமா தலைமையில் இதே ஐபிஎல் தொடரில் அசத்திய குயின்டன் டி காக் போன்ற தரமான வீரர்களுடன் தென்னாப்பிரிக்கா களமிறங்குகிறது. எனவே இரு அணிகளுமே கிட்டத்தட்ட சம பலத்துடன் மோதுவதால் இத்தொடரில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியுள்ளது.

முன்னோட்டம்:
இந்தியா: கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலையில் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் இத்தொடரில் களமிறங்கும் இந்திய அணியில் பலத்திற்கு பஞ்சமில்லை என்றே கூறலாம். ஏனெனில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் மிரட்டிய மாஸ் கம் பேக் விடுத்துள்ள ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர் வீரர்களுடன் உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் ஆகிய இளம் வீரர்கள் இந்திய அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

IND

அதுபோக ஷ்ரேயஸ் ஐயர், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், சஹால் என ஐபிஎல் தொடரில் அசத்தி சூப்பரான பார்மில் இருக்கும் வீரர்கள் இந்திய அணியில் நிறைந்து காணப்படுகின்றனர். மேலும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக இத்தொடரில் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

- Advertisement -

அதைவிட இந்தியா எப்போதுமே தனது சொந்த மண்ணில் வலுவான ராஜாவைப் போல எதிரணிகளை சொல்லி அடித்து வருவதால் இந்த தொடரிலும் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்று கோப்பையை முத்தமிடும் என்று நம்பலாம். அத்துடன் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒருநாள் தொடரில் தங்களுக்கு 3 – 0 என்ற வைட்வாஷ் தோல்வியை பரிசளித்த தென் ஆப்பிரிக்காவுக்கு இம்முறை சொந்த மண்ணில் பதிலடி கொடுத்து இந்தியா பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பும் இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

RSA

தென்ஆப்பிரிக்கா: தெம்பா பவுமா தலைமையில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் இந்த தொடரில் இந்தியாவிற்கு சவாலைக் கொடுத்து கோப்பையை வெல்ல தென்ஆப்பிரிக்காவுக்கு தயாராகி உள்ளது. ஏனெனில் அந்த அணியில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் மிரட்டிய டேவிட் மில்லர், குயின்டன் டி காக், ககிஸோ ரபாடா போன்ற மேட்ச் வின்னர்கள் தேவையான அளவு உள்ளனர். அத்துடன் மேற்குறிப்பிட்ட வீரர்கள் கடந்த பல வருடங்களாக இந்திய ஆடுகளங்களில் விளையாடி இந்திய கால சூழ்நிலைகளை தெரிந்து வைத்துள்ளவர்கள்.

- Advertisement -

மேலும் கடந்த ஜனவரியில் கேஎல் ராகுல் தலைமையிலான இந்தியாவை தங்களது சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் தோற்கடித்த புத்துணர்ச்சி இன்னும் தென் ஆப்பிரிக்காவிடம் காணப்படுகிறது. எனவே இந்த தொடரில் அந்த அணி இந்தியாவிற்கு கடுமையான சவாலை கொடுத்து கோப்பையை வெல்வதற்கு முழுமூச்சுடன் போராட என்று நம்பலாம்.

INDvsRSA

புள்ளிவிவரங்கள்:
1. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் இதுவரை 17 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 9 போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது. தென் ஆப்பிரிக்கா 6 போட்டிகளில் வென்றுள்ளது. 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன.

2. குறிப்பாக இந்த தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் இவ்விரு அணிகளும் வரலாற்றில் மோதிய 6 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா 3 முறை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. இந்தியா 1 போட்டியில் மட்டுமே வென்றது.

indvswi

3. இருப்பினும் கடந்த நவம்பர், பிப்ரவரி என சமீபத்தைய மாதங்களில் நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக இந்தியா பங்கேற்ற 3 டி20 தொடர்களிலும் ஒரு போட்டியில் கூட தோற்காமல் 3 – 0 என்ற கணக்கில் 3 தொடரையும் வைட்வாஷ் செய்து வென்று சொந்த மண்ணில் பலமான அணியாக காட்சியளிக்கிறது.

Advertisement