கரோனா வைரஸ் எதிரொலி இந்திய தென் ஆப்பிரிக்கா தொடருக்கு ஆப்பு – அடுத்தடுத்த போட்டிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Ind
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் முதல் போட்டி நடப்பதாக இருந்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மாலை 6.30 மணிக்கு போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Rain-1

- Advertisement -

இந்நிலையில் மார்ச் 15 மற்றும் மார்ச் 18ஆம் தேதி லக்னோ மற்றும் கொல்கத்தாவில் அடுத்த இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் மக்கள் திரளாக கூடுவதற்கு தடை விதித்துள்ளது.

இந்தியாவிலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கிரிக்கெட் தொடர்கள் நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது . தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் ஒரு நாள் போட்டியில் ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்றாக கூடுவார்கள். இதன் காரணமாக வைரஸ் தொற்று அதிகமாக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை ரசிகர்கள் இல்லாமல் மூடிய மைதானத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடரையும் மூடிய மைதானத்தில் நடத்தலாமா என இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.

- Advertisement -

பெரும்பாலும் அடுத்த சில வாரங்களுக்கு நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் மூடிய மைதானத்திலேயே நடைபெற வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த தொடர் ரசிகர்கள் இன்றி சாதாரணமாக நடைபெற உள்ளது.

ஏற்கனவே முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து நடைபெற இருக்கும் போட்டிகளில் ரசிகர்கள் இல்லாமல் இந்த தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement