வைட்வாஷ் செய்யுமா இந்தியா, இந்தூர் மைதானம் எப்படி, வரலாற்று புள்ளிவிவரங்கள் – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

Holkar Indore Cricket Stadium Ground
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் புதிய கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் வென்று உலகின் நம்பர்-1 20 அணியாக முன்னேறிய இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் அந்த தோல்வியில் துவளாமல் அடுத்ததாக சொந்த மண்ணில் டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தற்போது தென் ஆப்பிரிக்காவையும் சாய்த்துள்ள இந்தியா மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது.

மேலும் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து டி20 தொடரை வென்று நிம்மதியடைந்துள்ள இந்தியா அக்டோபர் 4ஆம் தேதியன்று நடைபெறும் கடைசி போட்டியிலும் வென்று வைட்வாஷ் வெற்றியுடன் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட போராட உள்ளது. இந்திய அணியில் பேட்டிங் பலமாக இருந்தாலும் பந்துவீச்சு சுமாராக இருப்பதால் உலகக் கோப்பைக்கு முன்பாக இந்த கடைசி போட்டியில் அதைத் திருத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தூர் மைதானம்:
இப்படி குறைகளைத் திருத்திக்கொள்ள வேண்டிய இப்போட்டி அக்டோபர் 4ஆம் தேதியன்று இரவு 7 மணிக்கு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறுகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதான பால்கனியை போல ஒரு பெவிலியனை கொண்ட சிறப்பம்சம் வாய்ந்த இம்மைதானத்தில் கடந்த 2006 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகிறது.

1. மொத்தம் 30000+ ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் வரலாற்றில் இதுவரை 2 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் ஒருமுறை முதலில் பேட்டிங் செய்த அணியும் ஒருமுறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளது.

- Advertisement -

2. இங்கு கடந்த 2017இல் முதல் முறையாக இலங்கையை எதிர்கொண்ட இந்தியா ரோகித் சர்மாவின் அதிரடியான சதத்தால் (118) 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின் கடந்த 2020இல் மீண்டும் இலங்கை எதிர்கொண்ட இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த வகையில் பங்கேற்ற 2 போட்டிகளிலும் வென்று ராசியாக கருதப்படும் இம்மைதானத்தில் இந்தியா முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

புள்ளிவிவரங்கள்:
இந்த மைதானத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த டாப் 3 பேட்ஸ்மேன்கள்:
1. கேஎல் ராகுல் : 134
2. ரோஹித் சர்மா : 118
3. குசால் பெரேரா : 111

- Advertisement -

இந்த மைதானத்தில் ரோகித் சர்மா மட்டும் சதமடித்த ஒரே பேட்ஸ்மேன்களாகவும் கேஎல் ராகுல் மற்றும் பெரேரா ஆகியோர் தலா 1 அரை சதம் அடித்த பேட்ஸ்மேன்களாகவும் திகழ்கின்றனர். அத்துடன் இந்த மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 3 பவுலர்கள்:
1. குல்தீப் யாதவ் : 5
2. யுஸ்வென்ற சஹால் : 4
3. ஷார்துல் தாகூர் : 3

இங்கு டி20 கிரிக்கெட்டில் எந்த பவுலரும் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை என்ற நிலைமையில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்துள்ள பவுலர் : யுஸ்வென்ற சஹால் (4/52). மேலும் இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி : இந்தியா : 260/5, 2017

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் இந்தூரில் இன்று பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கான வாய்ப்பு மிகமிக குறைவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளதால் இப்போட்டி முழுமையாக நடைபெற உள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:
இந்தியாவில் இருக்கும் மைதானங்களில் இந்தூர் மைதானல் பிளாட்டான மைதானமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள பிட்சில் பந்து நன்றாக பவுன்ஸாகி பேட்டுக்கு வரும் என்பதால் சூழ்நிலையை உணர்ந்து ஆரம்பகட்ட சவாலை சமாளித்து செட்டிலாகும் பேட்ஸ்மேன்கள் எளிதாக அதிரடியாக ரன்களை குவிக்கலாம். அதற்கேற்றார்போல இம்மைதானத்தில் பவுண்டரி எல்லையும் (56 – 68 மீட்டர்கள்) என குறைவான தூரங்களை கொண்டுள்ளது.

அதனால் பேட்ஸ்மேன்கள் எளிதாக பவுண்டரிகளை அடிக்கலாம் என்பதால் இம்மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதனாலேயே இங்கு ரோஹித் சர்மா 118 ரன்கள் விளாசி இந்தியா 260 ரன்களைக் குவித்து முதல் போட்டியில் வென்றது. மேலும் இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோர் 201 ஆகும்.

இதையும் படிங்க : தீபக் சாஹரும் இல்ல. ஷமியும் இல்ல. பும்ராவிற்கு பதில் செலக்ட் ஆகப்போறது இவர்தானாம் – பி.சி.சி.ஐ ஸ்கெட்ச்

அதனால் கௌகாத்தி போலவே இப்போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதால் பவுலர்கள் சுதாரிப்புடன் பந்து வீசினால் மட்டுமே விக்கெட்டுகளை எடுக்க முடியும். மேலும் இது இரவு நேர போட்டி என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement