IND vs SA : பழைய கணக்கை தீர்த்து வெல்லுமா இந்தியா – வரலாற்று புள்ளிவிவரம், அதிக ரன்கள் – விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியல்

INDvsRSA
- Advertisement -

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தில் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அனைத்து இருதரப்பு தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்ட இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியது. இருப்பினும் முதல்முறையாக சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறிய இந்தியா விமர்சனங்களை சந்தித்தது.

India

- Advertisement -

ஆனால் யானைக்கும் அடி சறுக்கியதை போல் சந்தித்த அந்த தோல்வியில் துவளாத இந்தியா அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்று மீண்டும் வெற்றி பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளது. அந்த வரிசையில் உலகக் கோப்பைக்கு முன்பாக கடைசி டி20 தொடராக சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா எதிர்கொள்கிறது.

இந்தியா: செப்டம்பர் 28, அக்டோபர் 2, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் இத்தொடரில் இதுவரை செய்த தவறுகளை திருத்திக் கொண்டு வெற்றியுடன் உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலியா புறப்பட இந்தியா போராட உள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை ராகுல் சுமாரான பார்மில் தவித்தாலும் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பியதும் மிடில் ஆர்டரும் ஓரளவு வலுவாக இருப்பதும் தெம்பை கொடுக்கிறது.

IND vs RSA Pant Chahal

ஆனால் சுழல் பந்து வீச்சில் சஹால் மற்றும் கடைசி கட்ட ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தமாக தடுமாறும் கதை இன்னும் மாறவில்லை. எனவே அந்த குறைகளை சரி செய்து கொண்டு இத்தொடரில் போராடினால் மட்டுமே இந்தியாவால் வெற்றியை சுவைக்க முடியும்.

- Advertisement -

தென்ஆப்பிரிக்கா: ஏனெனில் மறுபுறம் தெம்பா பவுமா தலைமையில் மில்லர், டீ காக், ஹென்றிக்ஸ், பிரிட்டோரியஸ், ராபடா, சம்சி போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட தென்ஆப்பிரிக்கா இந்தியாவுக்கு அதன் சொந்த மண்ணில் சவாலை கொடுக்கும் அளவுக்கு தேவையான பலத்தை பெற்றுள்ளது.

INDvsRSA

குறிப்பாக கடந்த ஜூன் மாதம் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொண்ட அந்த அணி முதலிரண்டு போட்டிகளில் வென்று அடுத்த 2 போட்டிகளில் தோற்றாலும் கடைசி போட்டியில் வென்று கோப்பையை வெல்ல காத்திருந்த போது பெங்களூருவில் மழை தடுத்து நிறுத்தி தொடரை சமன் செய்தது. எனவே சொந்த மண்ணாக இருந்தாலும் தென் ஆப்பிரிக்காவை குறைத்து மதிப்பிடாமல் இந்தியா விளையாட வேண்டியது அவசியமாகிறது.

- Advertisement -

பழைய கணக்கு:
1. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் இதுவரை 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 11 போட்டிகளில் வென்று வலுவான அணியாக திகழ்கிறது. 8 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வென்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

INDvsRSA

2. அதைவிட இத்தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் இவ்விரு அணிகளும் மோதிய 9 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா 5 வெற்றிகளை பெற்று சவாலாக நிற்கிறது. இந்தியா 3ல் மட்டுமே வென்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. மேலும் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா வரலாற்றில் ஒரு முறை கூட தென் ஆப்பிரிக்காவை ஒரு டி20 தொடரில் தோற்கடித்ததில்லை. எனவே அந்த பழைய கணக்குக்கு இம்முறையாவது இந்தியா தீர்க்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

அதிக ரன்கள்:
1. டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியல்:
1. ரோகித் சர்மா : 362
2. சுரேஷ் ரெய்னா : 339
3. விராட் கோலி : 254

Raina

2. வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அதிகபட்சமாக தலா 1 சதங்களை அடித்துள்ளார்கள். தலா 2 அரை சதங்களுடன் விராட் கோலி, ரோகித் சர்மா, இஷான் கிசான் அதிக அரை சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர். மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து இந்திய பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா (106 ரன்கள்) உள்ளார்.

3. வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 3 இந்திய பவுலர்கள்:
1. புவனேஸ்வர் குமார் : 14
2. ரவிசந்திரன் அஸ்வின் : 10
3. சஹால்/ஹர்சல் படேல் : தலா 7

Bhuvaneswara Kumar

4. மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை பதிவு செய்த இந்திய பவுலர் மற்றும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலராக புவனேஸ்வர் குமார் (5/24) சாதனை படைத்துள்ளார்.

Advertisement