IND vs RSA : முதல் ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் – கேன்சலாகவும் வாய்ப்பு

Pitch
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று லக்னோ மைதானத்தில் துவங்க உள்ளது.

INDvsRSA Cup

- Advertisement -

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஷிகார் தவான் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணியானது இன்று அதிகாலை ஆஸ்திரேலியா பயணித்ததால் இரண்டாம் தர இந்திய கிரிக்கெட் அணி தவான் தலைமையில் இந்த தொடரில் களம் காண்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று லக்னோ மைதானத்தில் 1:30 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த போட்டியானது சற்று தாமதமாக துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் லக்னோவில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

IND vs RSA INd Fans Rain bengaluru Stadium

மேலும் தற்போது மைதானத்தில் பனிப்பொழிவு இருப்பதன் காரணமாக ஒன்றரை மணிக்கு டாஸ் போடப்பட்டு இரண்டு மணிக்கு போட்டி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றைய போட்டி அரை மணி நேரம் தாமதமாக துவங்கும் என்று தெரிகிறது. அது மட்டுமின்றி பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் என்று கூறப்பட்டுள்ள இந்த முதல் போட்டியானது ரத்து செய்யப்படவும் அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஏனெனில் இன்று லக்னோவில் மழை பெய்ய 57 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தற்போதும் லக்னோ மைதானத்தில் பனிப்பொழிவு காணப்பட்டு வருவதால் நிச்சயம் இந்த போட்டி முழுமையாக நடைபெறுமா? என்று கேட்டால் சந்தேகம்தான்.

Advertisement