IND vs RSA : பெங்களூரு 5வது போட்டியை அச்சுறுத்தும் மழை பெய்யுமா?, முழு வெதர் ரிப்போர்ட் இதோ

Ground
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் உச்சகட்டமான பரபரப்பை எட்டியுள்ளது. ஏனெனில் தலைநகர் டெல்லியில் துவங்கி கட்டாக்கில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டிகளில் அசால்டாக சேசிங் செய்த தென் ஆப்பிரிக்கா 12 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவை சொந்த மண்ணில் தடுத்து நிறுத்தி அடுத்தடுத்த தோல்விகளை பரிசாகக் கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இருப்பினும் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத தருணத்தில் அடுத்தடுத்த தோல்விகளுக்கு அடிபணியாத இந்திய அணியினர் விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது போட்டியில் கொதித்தெழுந்து பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு வாழ்வா – சாவா போட்டியில் வாழ்வை கண்டனர்.

IND vs RSA Chahal Axar Patel

- Advertisement -

அதோடு நிற்காமல் ராஜ்கோட் நகரில் நடந்த 4-வது போட்டியிலும் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அசத்திய இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று சொந்த மண்ணில் அவ்வளவு சுலபமாக தோற்று விடமாட்டோம் என்று தென் ஆப்பிரிக்காவுக்கு சவாலை கொடுத்துள்ளது. இதனால் 2 – 2* என்ற கணக்கில் சமனில் உள்ள இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 5-வது மற்றும் கடைசி போட்டி ஜூன் 19-ஆம் தேதியன்று பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்குகிறது.

வெல்லப்போவது யார்:
இப்போட்டியில் கடைசி முயற்சியாக முழு மூச்சுடன் முழு திறமையை வெளிப்படுத்தி வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் போராட உள்ளனர். அதில் தென் ஆப்பிரிக்காவை பொருத்தவரை முதல் 2 போட்டிகளில் நிகழ்த்திய மேஜிக்கை அடுத்த 2 போட்டிகளில் விட்டாலும் இந்த முக்கியமான போட்டியில் மீண்டும் காட்டுவதற்கு தயாராகியுள்ளது. அந்த அணியின் பந்துவீச்சு ஓரளவு சிறப்பாக இருக்கும் நிலையில் பேட்டிங் தான் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

miller

அதிலும் டேவிட் மில்லர், ஹென்றிச் க்ளாஸென் ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முதல் 2 போட்டிகளுக்கு பின் சிறப்பாக செயல்பட தவறியது தோல்விக்குப் முக்கிய பங்காற்றியது. எனவே இந்த முக்கியமான போட்டியில் வெற்றி பெறுவதற்கு சிறப்பான பந்துவீச்சுடன் அந்த முக்கிய வீரர்களும் குயின்டன் டி காக், கேப்டன் பவுமா போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்களும் ரன்கள் அடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தியாவை பொறுத்தவரை முதல் 2 போட்டிகளில் தாங்கள் வீசிய மோசமான பந்து வீச்சுதான் தோல்விக்கு காரணம் என்று உணர்ந்த இந்திய பவுலர்கள் அடுத்த 2 போட்டிகளில் முதல் ஓவரில் இருந்தே துல்லியமாகவும் தரமாகவும் பந்துவீசி வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தனர். அப்படி பார்முக்கு திரும்பி புத்துணர்ச்சியுடன் உள்ள இந்திய பவுலர்கள் அதை கடைசி போட்டியிலும் செய்தால் வெற்றி தாமாக வந்து விடும். அத்துடன் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோரால் இந்தியாவின் மிடில் ஆர்டர் வலுவாக உள்ளது.

Dinesh Karthik and Hardik Pandya

ஆனால் ருதுராஜ், ஷ்ரேயஸ் ஐயர், கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் டாப் ஆர்டரில் இதுவரை சுமாராக செயல்பட்டாலும் இந்த முக்கியமான போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. மொத்தத்தில் டி20 உலக கோப்பை 2022 தொடருக்கு முன்பாக உத்வேகத்தைக் கொடுக்க கூடிய இந்த தொடரின் கோப்பையை வெல்ல இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக போராடுவார்கள் என்பதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

குறுக்க மழை:
இந்த முக்கியமான போட்டியில் வெல்பவர்களுக்கே கோப்பை என்ற சூழ்நிலையில் “குறுக்கே இந்த கௌஷிக் வந்தா” என்பதுபோல் இப்போட்டிக்கு மழையின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆம் இப்போது நடைபெறும் பெங்களூரு நகரில் ஜூன் 19-ஆம் தேதியன்று சராசரியாக 51% சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதுவும் போட்டி நடைபெறும் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு 50% க்கும் மேல் வாய்ப்புள்ளதாக தெரிய வருவதால் இப்போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற அச்சம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Bengaluru Chinnasamy Cricket Ground Stadium

ஒருவேளை பெரிய அளவில் மழை இல்லை என்றால் ஓவர்கள் குறைக்கப்பட்டு இந்த போட்டியின் முடிவை காண்பதற்கு அம்பயர்கள் முயற்சிப்பார்கள். ஆனாலும் அதற்கான வாய்ப்பு குறைவாகவே தென்படுகிறது. பெங்களூருவில் போட்டி நாளன்று இரவு 7 – 12 வரையிலான மழைக்கான வாய்ப்பு விபரம் இதோ:
7 மணி, 51% மழை வாய்ப்பு
8 மணி, 47% மழை வாய்ப்பு
9 மணி, 40% மழை வாய்ப்பு
10 மணி, 34% மழை வாய்ப்பு
11 மணி, 34% மழை வாய்ப்பு
12 மணி, 21% மழை வாய்ப்பு

இதையும் படிங்க : IND vs RSA : கோப்பையை வெல்லுமா இந்தியா, பெங்களூரு மைதான வரலாறு – பிட்ச் ரிப்போர்ட் இதோ

ஒருவேளை இப்போட்டி முழுமையாக மழையால் ரத்து செய்யப்படும் பட்சத்தில் 2 – 2 என தொடர் சமநிலையில் உள்ளதால் இரு அணிகளும் இத்தொடரின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பையை பகிர்ந்து கொள்வார்கள்.

Advertisement