2வது டெஸ்ட் நடைபெறும் நியூலேண்ட்ஸ் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Newlands Stadium Cape Town
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ள இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் 6வது இடத்திற்கு சரிந்து பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

எனவே அதிலிருந்து மீண்டு தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய இந்தியா 2வது போட்டியில் வென்று குறைந்தபட்சம் தொடரை சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இருப்பினும் அதற்கு பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அனைத்து வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்தி கடுமையாக போராடுவது அவசியமாகிறது.

- Advertisement -

நியூலேண்ட்ஸ் மைதானம்:
அந்த வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி ஜனவரி 3ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. பின்பகுதிகளில் கண்களைக் கவரும் மலைத்தொடர்களுடன் இயற்கையான சூழ்நிலைகளை கொண்ட இந்த அழகான மைதானத்தில் 1993 முதல் இதுவரை மொத்தம் 59 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது.

அதில் 59 போட்டிகளிலும் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா 27 வெற்றிகளையும் 21 தோல்விகளையும் 11 ட்ராவையும் பதிவு செய்துள்ளது. இங்கே 6 போட்டியில் விளையாடியுள்ள இந்தியா 4 தோல்வி 2 டிரா பதிவு செய்துள்ள நிலையில் ஒரு வெற்றியை கூட பெற்றதில்லை. இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் (489), அதிகபட்ச ஸ்கோர் (169), அதிக சதங்கள் (2) அடித்த இந்திய வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இங்கே அதிக விக்கெட்டுகளை (12) எடுத்த இந்திய வீரராக ஜாம்பவான் ஜவால் ஸ்ரீநாத் சிறந்த பவுலிங்கை (7/195) பதிவு இந்திய வீரராக ஹர்பஜன் சிங் சாதனை படைத்துள்ளனர். இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்து அதிகபட்ச ஸ்கோர் 414, 2007

வெதர் ரிப்போர்ட்:
கேப் டவுன் நகரில் அடுத்த 5 நாட்களும் மழைக்கான வாய்ப்பில்லை என்று அங்குள்ள வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
சென்சூரியன் போலவே நியூலேண்ட்ஸ் மைதானமும் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் ராஜாங்கம் நடத்தும் இடமாக இருந்து வருகிறது. மேலும் மலைப்பகுதிகளுக்கு முன்பாக மைதானம் இருப்பதால் காற்றின் வேகம் சற்று அதிகமாக இருக்கலாம். அதனால் ஸ்விங் செய்யக்கூடிய பவுலர்கள் இந்த மைதானத்தில் அதிக சாதகத்தை பெறுவார்கள்.

இதையும் படிங்க: 2வது டெஸ்டில் அவருக்கு பதிலா அஸ்வின் கண்டிப்பா விளையாடனும்.. ஸ்ரீகாந்த் முக்கிய கருத்து

எனவே பேட்ஸ்மேன்கள் இங்கே ரன்கள் குவிப்பதற்கு மிகவும் கவனத்துடன் செட்டிலாகி விளையாடுவது அவசியமாகும். அத்துடன் கடைசி 2 நாட்களில் இந்த மைதானம் ஓரளவு ஸ்பின்னர்களுக்கு நன்றாகவே கை கொடுக்கும் என்று நம்பலாம். 325, 292, 234, 163 என்பது இந்த மைதானத்தில் 4 இன்னிங்ஸ்களின் சராசரி ஸ்கோர்களாகும். அதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம். ஏனெனில் நாட்கள் செல்ல செல்ல இங்கே பேட்டிங் செய்வது கடினமாகும்.

Advertisement