IND vs PAK : பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இடம்பெறப்போவது யார்? கே.எல் ராகுலா? இஷான் கிஷனா? – விவரம் இதோ

Ishan-Kishan-and-KL-Rahul
Advertisement

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு புள்ளியையும், நேபாள் அணிக்கு எதிரான வெற்றியும் பெற்ற இந்திய அணியானது சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த வகையில் சூப்பர் ஃபோர் சுற்றின் முதல் ஆட்டமாக செப்டம்பர் 10-ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியானது கொழும்பு நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் போட்டிக்கு ஒருநாள் முன்னதாகவே அறிவித்து அதிரடி காட்டி இருந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுவரை உறுதியாகாமல் உள்ளது. ஏனெனில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த கே.எல் ராகுல் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத வேளையில் தற்போது இலங்கை வந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

அதேவேளையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தவித்த போது மிடில் ஆர்டரில் களமிறங்கிய இஷான் கிஷன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 82 ரன்கள் அடித்ததால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் கே.எல் ராகுல் விளையாடுவாரா? அல்லது இஷான் கிஷன் விளையாடுவாரா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

கே.எல் ராகுல் ஏற்கனவே மிடில் ஆர்டரில் தனது அற்புதமான ஆட்டத்தை நிரூபித்து நல்ல ரெக்கார்டை வைத்திருப்பதால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவரே விக்கெட் கீப்பராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் தொடர்ச்சியாக நான்கு அரை சதங்களை அடித்து அட்டகாசமான பார்மில் இஷான் கிஷன் இருக்கும் வேளையில் அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : தெ.ஆ அணியை மிஞ்சி ஆசிய அளவில் இலங்கை புதிய சரித்திர சாதனை – எதிரணியை நொறுக்குவதில் தனித்துவமான உலக சாதனை

இப்படி இருவருமே பிளேயிங் லெவனில் விளையாடினால் ஷ்ரேயாஸ் ஐயர் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனக்கு கிடைத்த வாய்ப்பை ஷ்ரேயாஸ் ஐயர் பயன்படுத்த தவறி விட்டதால் அவர் வெளியேற்றப்பட்டு இவர்கள் இருவருமே விளையாடுவார்கள் என்று தெரிகிறது. எது எப்படி இருப்பினும் போட்டிக்கு முன்னர் தான் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்பது உறுதியாகும்.

Advertisement