IND vs PAK : வலைப்பயிற்சியில் கே.எல் ராகுலால் ஏற்பட்ட குழப்பம். ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆப்பு – எப்படி சமாளிக்க போறாங்களோ

Shreyas-Iyer-and-Rahul
- Advertisement -

நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த கே.எல் ராகுல் பெங்களூருவில் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு விளையாடியிருந்தார். ஆனால் அந்த பயிற்சி முகாம் முடியும் தருவாயில் மீண்டும் காயம் ஏற்பட்டதன் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடரில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே இந்திய அணியின் நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ள கே.எல் ராகுல் அங்கும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்த அவர் நேரடியாக சூப்பர் போஃர் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் வலைப்பயிற்சியின் போது கே.எல் ராகுல் வெறும் பேட்டிங் பயிற்சியே மேற்கொண்டதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கே.எல் ராகுல் விக்கெட் கீப்பராக இருக்கும்போது ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது கே.எல் ராகுல் வெறும் பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டதால் அணியில் கூடுதலாக இசான் கிஷான் விக்கெட் கீப்பராக விளையாடினால் ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்திற்கு ஆபத்து ஏற்படும். ஏற்கனவே மிடில் ஆர்டரில் கே.எல் ராகுல் தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அவர் நேரடியாக பிளேயிங் லெவனில் விளையாடுவது உறுதி.

- Advertisement -

ஒருவேளை அவர் விக்கெட் கீப்பராக விளையாடாமல் முழுநேரமாக பேட்ஸ்மேனாக விளையாடும் பட்சத்தில் நிச்சயம் ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட இருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கேப்டன் ரோகித் சர்மா எந்த முடிவினை கையிலெடுப்பார்? எப்படி இந்த பிரச்சினையை சமாளிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

அதே வேளையில் ஐந்தாம் இடத்தில் களமிறங்கி வரும் இஷான் கிஷன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். எனவே அவரையும் அணியிலிருந்து வெளியேற்ற முடியாது. இப்படி அடுத்தடுத்து வரும் சிக்கலை இந்திய அணி எப்படி சமாளித்து இந்த கோப்பையை வெல்லப் போகிறது? என்ற குழப்பமே தற்போது இந்திய அணியில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement