- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நடுவரின் தவறால் தவறிய இந்தியாவின் டாஸ் அதிர்ஷ்டம்.. அமைதியுடன் வாங்கிய பாகிஸ்தான் கேப்டன்.. நடந்தது என்ன?

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் அக்டோபர் ஐந்தாம் தேதி இலங்கையில் உள்ள கொழும்புவில் 6வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியது அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில் 2025 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி கைகுலுக்காமல் வெளியேறியது சர்ச்சையை உண்டாக்கியது. அந்த சூழ்நிலையில் துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வீசும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவுடன் இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் கை குலுக்கவில்லை.

- Advertisement -

நடுவரின் தீர்ப்பு:

அடுத்ததாக இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் நாணயத்தை சுண்டி விட்டார். அப்போது பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா எங்களுக்கு பூ வேண்டும் என்று கேட்டார். ஆனால் தரையில் விழுந்த போது நாணயத்தின் மேற்புறத்தில் தலை இருந்தது. அதை சரியாக பார்த்த போட்டியின் நடுவர் “ஷான்ட்ரே பிரட்ஸ்” தலை விழுந்துள்ளது என்பதையும் சரியாகச் சொன்னார்.

ஆனால் அடுத்ததாக இந்தியா டாஸ் வென்றது என்று சொல்வதற்கு பதிலாக அவர் பாகிஸ்தான் டாஸ் வென்றதாக தவறுதலாக சொன்னார். அதை இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத்தும் கவனிக்கத் தவறினார். மறுபுறம் அதை அமைதியுடன் ஏற்றுக்கொண்ட பாத்திமா தாங்கள் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். சில நிமிடங்கள் கழித்த பின்பே ரிப்ளையில் நடுவர் செய்த தவறால் இந்தியா டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் அதை பாகிஸ்தானிடம் தாரை வார்த்தது தெரிந்தது.

- Advertisement -

இந்தியா வெல்லுமா:

அந்த குழப்பத்துக்கு இடையே ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி 50 ஓவரில் போராடி அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு பிரதிகா ராவல் 31, மந்தனா 23, ஹர்லீன் தியோல் 46 ரன்கள் குவித்தனர். மிடில் ஆர்டரில் கேப்டன் ஹர்மன்பிரித் 19, ஜெமிமா ரோட்ரிகஸ் 32, தீப்தி சர்மா 25 ரன்கள் குவித்தனர். லோயர் ஆர்டரில் ரிச்சா கோஸ் அதிரடியாக 35* (20), ஸ்னே ராணா 20 ரன்கள் எடுத்தனர்.

இதையும் படிங்க: 2027 உ.கோ விடுங்க.. குறைஞ்சது அதுவரைக்கும் ரோஹித்தை கேப்டனாக விட்ருக்கலாமே? ஹர்பஜன் விமர்சனம்

அதன் வாயிலாக ஒரு மகளிர் உலகக் கோப்பை போட்டியில் ஒரு அரை சதம் கூட அடிக்காமலேயே இந்தியா தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் அடித்து அசத்தியது. பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாத்திமா சானா 2, சடியா இக்பால் 2, டயானா பைக் 4 விக்கெட்டுகள் எடுத்தனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானை கட்டுப்படுத்தி வெல்லும் முனைப்புடன் இந்தியா பந்து வீசி வருகிறது.

- Advertisement -