IND vs PAK : மழையால் தடைபட்ட போட்டி. ரிசர்வ் டேவில் நிகழ்கப்போகும் மாற்றங்கள் – ரூல்ஸ் சொல்வது என்ன?

IND-vs-PAK-Rain
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே செப்டம்பர் 10-ஆம் தேதி கொழும்பு நகரில் துவங்கிய சூப்பர் ஃபோர் சுற்றின் முக்கியமான போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. ஏற்கனவே இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக வெளியான வானிலை அறிக்கையில் போட்டியின் போது மழை குறுக்கிடும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் : ஒருவேளை போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டேவில் போட்டியை நடத்த வேண்டும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கோரிக்கையை வைத்திருந்தது.

அதோடு ரசிகர்களும் இந்தியா பாகிஸ்தான் போட்டியினை முழுமையாக காண வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து இருந்ததால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான ரிசர்வ் டேவை (செப்டம்பர் 11) அறிவித்திருந்தது. அந்த வகையில் செப்டம்பர் 10-ஆம் தேதி போட்டி மழையால் தடை பட்டால் செப்டம்பர் 11-ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

ஆனால் இன்றைய போட்டி ஆரம்பித்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 24.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்திருந்த வேளையில் மழை பெய்ததால் மீண்டும் போட்டி நடைபெற சாத்தியமில்லாமல் போனது. அதன் காரணமாக இன்று போட்டி கைவிடப்பட்டதாகவும் நாளை ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும் பட்சத்தில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? எவ்வாறு இந்த போட்டி நடைபெறும்? என்பது குறித்து விதிமுறைகள் என்ன கூறுகின்றன? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

- Advertisement -

அந்த வகையில் இன்று போட்டி துவங்கி 24.1 ஓவர்கள் வரை இந்திய அணி விளையாடி விட்டதால் சில மணி நேரங்கள் காத்திருந்த அம்பயர்கள் மைதானத்தின் தன்மையை சோதித்தனர். ஆனால் மீண்டும் இன்று போட்டி நடைபெற வாய்ப்பே இல்லை என்பதால் போட்டி நாளை நடைபெறும் என்று அறிவித்தனர். ஒருவேளை மீண்டும் போட்டி இன்றே துவங்கி இருந்தால் 34 ஓவர்கள் வரை தான் நடைபெற்று இருக்கும் என்று கூறப்பட்டது.

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் தரமான சாதனையை சமன் செய்த கே.எல் ராகுல் – விவரம் இதோ

ஆனால் இன்று போட்டி மீண்டும் துவங்காமலே கைவிடப்பட்டதால் நாளை முழுவதுமாக இந்திய அணி 50 ஓவர்கள் பேட்டிங் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இன்றைய போட்டி கைவிடப்பட்ட 24.1 ஓவரில் இருந்தே நாளை இந்திய அணி பேட்டிங்கை ஆரம்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று இந்திய அணி முழுவதுமாக 50 ஓவர்கள் வரை விளையாடிய பின்னரே பாகிஸ்தான் அணி இலக்கை நோக்கி விளையாட துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement