IND vs PAK : ரிசர்வ் டேவான இன்றாவது போட்டி முழுசா நடக்குமா? – வானிலை அறிக்கை சொல்வது என்ன?

IND-vs-PAK-Weather
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று போட்டியானது நேற்று செப்டம்பர் 10-ஆம் தேதி கொழும்பு நகரில் துவங்கியது. இந்த போட்டி துவங்குவதற்கு முன்னதாக வெயில் சுட்டெரித்தாலும் வானிலை அறிக்கை தெரிவித்திருந்த தகவலின் படியே போட்டியின் பாதியில் மழை பெய்ய துவங்கியது.

இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து மிகச் சிறப்பாக ரன்களை குவித்துக் கொண்டிருந்த வேளையில் 24.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் என்ற நல்ல நிலையில் இருந்த போது போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் போட்டியை இனியும் தொடர்ந்து நடத்த முடியாது என்று அம்பயர்கள் அறிவித்தனர்.

- Advertisement -

அதோடு மழையால் தடைபட்ட இந்த போட்டி ரிசர்வ் டே-வில் விட்ட இடத்தில் இருந்து துவங்கும் என்று அறிவித்தனர். ஆசியக் கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியான இந்த போட்டியின் முடிவு இரண்டு அணிகளுக்குமே அவசியம் என்கிற வேளையில் இன்று ரிசர்வ் டே நாளிலும் போட்டி முழுவதுமாக நடைபெறுமா? நடைபெறாதா? வானிலை அறிக்கை என்ன சொல்கிறது? என்பது குறித்த தெளிவான தகவலை இங்கு காணலாம்.

அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே கொழும்பு நகரில் மாலை நேரங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோன்று நேற்று மழை பெய்தது போலவே திங்கள் கிழமையான இன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

- Advertisement -

ரிசர்வ் டே-வான் இன்று 3-மணிக்கு போட்டி துவங்கி ஒரு சில மணி நேரங்கள் எந்தவித தடையும் இன்றி போட்டி நடைபெற்றாலும் நிச்சயம் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு ரிசர்வ் டே-வான இன்றும் மழை பெய்தால் இறுதி முடிவுகளை அம்பயர்கள் தான் தீர்மானிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா 2023 உ.கோ ஜெயிச்சு கொடுப்பாருன்னு கனவு காணாதீங்க – இந்திய ரசிகர்களை இப்போதே எச்சரித்த முன்னாள் ஆஸி வீரர்

ஒருவேளை மழையால் இன்றும் போட்டி நடைபெறாமல் போனால் நிச்சயம் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடப்பு ஆசிய கோப்பை தொடரில் ஏகப்பட்ட போட்டிகள் மழை காரணமாக சிக்கலை சந்தித்து வரும் வேளையில் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement