IND vs PAK : 32 ஓவரில் 8 விக்கெட்டை மட்டுமே இழந்த பாகிஸ்தான் அணி ஆல் அவுட் என்று – அறிவிக்கப்பட என்ன காரணம்?

IND-vs-PAK
Advertisement

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று கொழும்பு மைதானத்தில் முடிவுக்கு வந்த சூப்பர் போர் சுற்றின் முக்கியமான போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது. ஏனெனில் அடுத்ததாக இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுடன் மோத இருக்கும் இந்திய அணி இந்த இரண்டு போட்டியில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட இறுதி போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு உறுதியாகி விடும்.

அதே வேளையில் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளதால் அடுத்து வரும் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது 357 ரன்கள் என்கிற இமாலய ரன்கள் இலக்கினை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி :

- Advertisement -

32 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்திருந்த வேளையில் 8 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தால் கூட ஆல் அவுட் என்று அறிவிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேறியது. இப்படி கடைசி 2 வீரர்கள் களத்திற்கு வராமலே பாகிஸ்தான் அணி ஆல் அவுட் அறிவிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? என்று குறித்த தகவலை இங்கு காணலாம்.

அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசியிருந்த நிலையில் ஹாரிஸ் ரவுப் நேற்றைய போட்டியில் பந்து வீசவே வரவில்லை அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை காரணமாகவே அவர் பந்துவீசவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதேபோன்று மற்றொரு வேகப்பந்து வீச்சளரான நசீம் ஷாவும் பீல்டிங்கின் போது தோள்பட்டையில் காயமடைந்ததால் அவரும் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. இப்படி இரண்டு வீரர்கள் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை. அதன் காரணமாகவே பாகிஸ்தான் அணி ஆல் அவுட் என்று அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை வரலாற்றில் சித்து, ரெய்னாவை முந்தி – இந்தியாவின் ஆல் டைம் நாயகனாக கிங் கோலி புதிய சாதனை

மேலும் எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு ஹாரிஸ் ரவுப் மற்றும் நசீம் ஷா ஆகிய இருவருமே முக்கிய வீரர்கள் என்பதால் முன்னெச்சரிக்கை காரணமாக அவர்களுக்கு பதிலாக இரண்டு மாற்று வீரர்களையும் பாகிஸ்தான் அணிக்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement