ஆசிய கோப்பை வரலாற்றில் சித்து, ரெய்னாவை முந்தி – இந்தியாவின் ஆல் டைம் நாயகனாக கிங் கோலி புதிய சாதனை

Raina Virat Kohli
Advertisement

இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா மாபெரும் வெற்றி பெற்று ஃபைனல் வாய்ப்பை ஆரம்பத்திலேயே உறுதி செய்துள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதி துவங்கி மழையால் ரிசர்வ் நாள் வரை சென்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 356/2 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 56, சுப்மன் கில் 58, விராட் கோலி 122*, கேஎல் ராகுல் 111* என டாப் 4 பேட்ஸ்மேன்களே பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடி பெரிய ரன்கள் குவித்தனர்.

சொல்லப்போனால் கடந்த போட்டியில் மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்து 66/4 என்ற மோசமான துவக்கத்தை பரிசளித்த ஷாகின் அப்ரிடி போன்ற பவுலர்களை இம்முறை இந்தியாவின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் அபாரமாக எதிர்கொண்டு அடித்து நொறுக்கி பதிலடி கொடுத்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 357 என்ற மிகவும் கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் ஆரம்பம் முதலே தடுமாற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

- Advertisement -

ஆசிய கோப்பையின் நாயகன்:
குறிப்பாக அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அழுத்தத்தில் பாபர் அசாம் 10, முகமது ரிஸ்வான் 2 போன்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 32 ஓவரில் 128 ரன்களுக்கு பாகிஸ்தானை கட்டுப்படுத்தி வென்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட் சாய்த்தார். அதனால் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ரன்கள் (228) வித்தியாசத்தில் வெற்றியை பெற்று இந்தியா சாதனை படைத்தது.

இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களும் முக்கிய பங்காற்றியிருந்தாலும் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 122* (94) ரன்களை 129.79 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து அசத்திய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். இது 50 ஓவர் ஆசிய கோப்பையில் அவர் வெல்லும் 4வது ஆட்டநாயகன் விருதாகும். இதன் வாயிலாக 50 ஓவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர் என்ற நவ்ஜோத் சித்து மற்றும் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை தகர்த்த விராட் கோலி புதிய சாதனை படைத்தார்.

- Advertisement -

கடந்த 1984ஆம் ஆண்டு முதல் பெரும்பாலும் 50 ஓவர் தொடராக நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் இதற்கு முன் நவ்ஜோத் சித்து மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா 3 ஆட்டநாயகன் விருதுகள் வென்றதே முந்தைய சாதனையாகும். இது போக 50 ஓவர் மற்றும் 20 ஓவர் என அனைத்து வகையான ஆசிய கோப்பை தொடரிலும் அதிக ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை தொடர்ந்து மற்ற வீரர்கள் எளிதில் எட்ட முடியாத உயரத்தில் விராட் கோலி படைத்துள்ளார். அந்த பட்டியல்:
விராட் கோலி : 7*
நவ்ஜோத் சித்து : 3
ரோஹித் சர்மா : 3
சுரேஷ் ரெய்னா : 3
ஷிகர் தவான் : 3

இதையும் படிங்க: ஒருநாள் கிரிக்கெட்டில் கங்குலி, தோனி, விராட் போன்ற எந்த இந்திய கேப்டனும் – செய்யாத புதிய தனித்துவ சாதனை படைத்த ரோஹித் சர்மா

அந்த வகையில் ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பையில் இந்தியாவின் நாயகனாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் விராட் கோலி 2023 உலகக்கோப்பையை வெல்லும் முனைப்புடன் நல்ல ஃபார்மில் அசத்தி வருவது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement