ஒருநாள் கிரிக்கெட்டில் கங்குலி, தோனி, விராட் போன்ற எந்த இந்திய கேப்டனும் – செய்யாத புதிய தனித்துவ சாதனை படைத்த ரோஹித் சர்மா

Rohit Sharma MS Dhoni Virat Kohli
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா அபார வெற்றி பெற்றது. செப்டம்பர் 10ஆம் தேதி துவங்கி மழையால் ரிசர்வ் நாள் வரை சென்று அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய 356/2 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 56, சுப்மன் கில் 58, விராட் கோலி 122*, கேஎல் ராகுல் 111* என டாப் 4 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவித்து அசத்தினார்கள்.

குறிப்பாக கடந்த போட்டியில் 66/4 என கட்டுப்படுத்தும் அளவுக்கு அச்சத்தலை கொடுத்த சாகின் அப்ரிடி போன்ற பவுலர்களை இந்த போட்டியில் இந்தியாவின் டாப் 4 அதிரடியாக எதிர்கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அதைத்தொடர்ந்து 357 என்ற பெரிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அழுத்தத்தில் ஆரம்பம் முதலே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 32 ஓவரில் 128 மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ரோஹித்தின் சாதனை:
அந்த அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 10, முகமத் ரிஸ்வான் 2 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக பகார் ஜமான் 27 ரன்கள் எடுத்தார். அந்தளவுக்கு பந்து வீச்சில் துல்லியமாக செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த மிகப்பெரிய வெற்றியால் கூடுதல் ரன் ரேட்டை பெற்றுள்ள இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு 90% இப்போதே உறுதியாகியுள்ளது.

முன்னதாக 2023ஆம் ஆண்டு துவக்கத்தில் ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது.

- Advertisement -

அந்த நிலையில் இந்த போட்டியில் 228 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் (228) வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற தனித்துவமான சாதனையை ரோகித் சர்மா படித்துள்ளார்.

இதையும் படிங்க: IND vs PAK : என்னோட ஸ்ட்ரென்த் என்னனு எனக்கு தெரியும். 5 விக்கெட் வீழ்த்தியது குறித்து – குல்தீப் யாதவ் பேட்டி

இதற்கு முன் சௌரவ் கங்குலி, எம்எஸ் தோனி, விராட் கோலி உட்பட வேறு எந்த இந்திய கேப்டனும் 2 வெவ்வேறு ஒருநாள் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்ததில்லை. சமீப காலங்களாகவே கேப்டன்ஷிப் பற்றி விமர்சனங்களை சந்தித்து வரும் ரோஹித் சர்மா இந்த சாதனைகளுடன் அதற்கு பதிலடி கொடுத்து 2023 உலக கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement