ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியான இந்தியா பாகிஸ்தான் போட்டியானது ஒரு வழியாக நேற்றுடன் முடிவுக்கு வந்தது. கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி கொழும்பு நகரில் துவங்கிய இந்த போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டு பின்னர் நேற்று செப்டம்பர் 11-ஆம் தேதி ரிசர்வ் டே போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
அதிலும் குறிப்பாக இந்திய அணி இந்த போட்டியில் பேட்டிங்கில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 356 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தியது. இந்திய அணி சார்பாக விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் சதமும், சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அரை சதமும் அடித்து அசத்தினர்.
பின்னர் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே குவிக்க இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.
இந்த தொடரில் தங்களது சிறப்பான செயல்பாடுகள் மூலம் இந்திய அணிக்கு சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி இப்படி சூப்பர் ஃபோர் சுற்றில் எளிதில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது அனைவருக்கும் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் இந்த சூப்பர் ஃபோர் சுற்று போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பெற்ற தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில் : வானிலை நிலவரம் என்பது நமது கையில் இல்லை இருந்தாலும் நாங்கள் எங்களுடைய பெஸ்ட் இந்த போட்டியில் வழங்கினோம். ஆனாலும் எங்களது அணியின் தரத்திற்கு ஏற்ப நாங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யவில்லை.
இதையும் படிங்க : IND vs PAK : மொதல்ல உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும். பாக் அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு – ரோஹித் சர்மா பேட்டி
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியான திட்டத்துடன் எங்களது பந்துவீச்சாளர்களை எதிர் கொண்டு துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள். குறிப்பாக விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி பெரிய ஸ்கோருக்கு சென்றனர். அதேபோன்று பும்ரா மற்றும் சிராஜ் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்து வீசினார்கள். அவர்களுக்கு எதிராக எங்களது பேட்ஸ்மேன்களால் அதனை சரியாக சமாளித்து விளையாட முடியவில்லை இது போன்ற சில விடயங்கள் தான் தோல்விக்கு காரணம் என பாபர் அசாம் கூறியது குறிப்பிடத்தக்கது.