ஆசிய கோப்பை 2022 : வெல்லப்போவது இந்தியாவா பாகிஸ்தானா, வரலாற்று புள்ளிவிவரம் – முழுலிஸ்ட் இதோ

- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை நிர்ணயிக்கும் ஆசிய கோப்பை 2022 தொடர் ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கியது. விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 2016க்குப்பின் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல 6 அணிகள் போட்டியிடுகின்றன. இருப்பினும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று குரூப் ஏ பிரிவில் உள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு தான் உலகம் முழுவதிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

INDvsPAK

- Advertisement -

காரணம் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் மோதும் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பதுடன் எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து இது போன்ற ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோகின்றன. அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிக்கு உலக அளவில் மவுசு எகிறியுள்ள நிலையில் கடைசியாக இதே துபாயில் மோதிய போது உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் புதிய வரலாறு படைத்தது.

அதனால் லீக் சுற்றுடன் வெளியேறி அவமானத்தை சந்தித்த விராட் கோலி தலைமையிலான இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. அவரது தலைமையில் நடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் வெற்றிநடை போட்டு வரும் இந்தியா இம்முறை பாகிஸ்தானை பழிதீர்க்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Babar Azam Rohit Sharma IND vs PAK

முன்னோட்டம்: பாகிஸ்தானை பொறுத்தவரை கடந்த முறை வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் அப்ரிடி காயத்தால் விலகியது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பாபர் அசாம், முகமத் ரிஸ்வான் போன்ற ஒருசில வீரர்களைத் தவிர அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இல்லாத அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பலவீனமாக இருக்கிறது. மேலும் சுமாரான சுழல் பந்துவீச்சாளர்களை கொண்டிருக்கும் அந்த அணி இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு பாபர் அசாம் போன்ற முக்கிய வீரர்கள் பொறுப்புடன் மிகச் சிறப்பாக செயல்படுவது அவசியமாகியுள்ளது.

- Advertisement -

மறுபுறம் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் விலகியது வேகப்பந்து வீச்சில் பின்னடைவாக இருந்தாலும் அதை சமாளிக்கும் அளவிற்கு புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் சிங் போன்ற திறமையான அனுபவமும் இளமையும் கலந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர். பேட்டிங்கில் விராட் கோலி, ராகுல் போன்றவர்கள் சமீபத்தில் ரன்களை அடிக்கவில்லை என்றாலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் என்பதுடன் நல்ல ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்றவர்கள் வலு சேர்க்கின்றனர். அத்துடன் சஹால் போன்றவர்களால் சுழல் பந்துவீச்சு துறை உட்பட அனைத்து துறைகளிலும் பாகிஸ்தானை விட இந்தியா வலுவானதாக உள்ளது.

pakisthan IND vs PAK

புள்ளிவிவரங்கள்:
1. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் 9 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 7 போட்டிகளில் வென்ற இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது. பாகிஸ்தான் 2 போட்டிகளில் மட்டும் வென்றது.

- Advertisement -

2. அதேபோல் ஒட்டுமொத்த ஆசிய கோப்பை (20 + 50 ஓவர்) வரலாற்றில் பங்கேற்ற 14 போட்டிகளில் 8 போட்டிகளில் இந்தியா வென்று வலுவாக திகழ்கிறது. 5 போட்டிகளில் பாகிஸ்தான் வென்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

3. வரலாற்றில் அதிகபட்சமாக இந்தியா 7 ஆசிய கோப்பைகளை வென்று 2018இல் இதே துபாயில் கடைசியாக நடந்த தொடரிலும் வென்று நடப்பு சாம்பியனாகவும் வெற்றிகரமான அணியாகவும் திகழ்கின்றது. மறுபுறம் 2000, 2012 ஆகிய 2 வருடங்களில் மட்டும் பாகிஸ்தான் கோப்பையை வென்றது.

- Advertisement -

அதிக ரன்கள், விக்கெட்கள்:
இந்த தொடர் டி20 போட்டிகளாக நடைபெறுவதால் அது சம்பந்தப்பட்ட புள்ளி விவரங்களைப் பார்ப்போம்:
1. டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியல்:
1. விராட் கோலி : 311 (7 இன்னிங்ஸ்)
2. யுவராஜ் சிங் : 155 (8 இன்னிங்ஸ்)
3. கெளதம் கம்பீர் : 139 (5 இன்னிங்ஸ்)

Virat Kohli IND vs PAK

2. டி20 வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை எந்த இந்திய வீரரும் சதமடிக்கவில்லை. அதிகபட்சமாக விராட் கோலி 3 அரை சதங்கள் அடித்துள்ளார். யுவராஜ் சிங், கௌதம் கம்பீர், ராபின் உத்தப்பா ஆகியோர் அடுத்தபடியாக தலா 1 அரை சதங்கள் அடித்துள்ளனர்.

3. வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 2 இந்திய பவுலர்கள்:
1. இர்பான் பதான் : 6 (3 இன்னிங்ஸ்)
2. புவனேஸ்வர் குமார் : 5 (4 இன்னிங்ஸ்)

இதையும் படிங்க : ஆசியகோப்பை : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல்

4. பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை எந்த இந்திய பவுவலரும் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை. கடந்த 2007 உலகக்கோப்பை இறுதி போட்டியில் வெறும் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்த இர்பான் பதான் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்துள்ளார்.

5. டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 192/5, அஹமதாபாத், 2012

Advertisement