IND vs NZ : வரலாற்றிலேயே 3 ஆவது முறையாக நேற்றைய போட்டியில் நடந்த அரிதான நிகழ்வு – அப்படி என்ன நடந்தது?

IND-vs-NZ-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நேற்று நேப்பியர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் நடைபெற்றுள்ள ஒரு சுவாரசிய சம்பவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமின்றி சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது முறையாக நடைபெற்ற இந்த அரிதான நிகழ்வு குறித்த தகவலும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது.

IND vs NZ

- Advertisement -

இவ்வேளையில் நேற்றைய மூன்றாவது போட்டி இரு அணிகளுக்குமே வெற்றி தோல்வி இன்றி டையில் முடிவடைந்தது. இதன் காரணமாக இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை குவித்தது.

பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 9 ஓவர்களை விளையாடி முடித்த போது 4 விக்கெடுகளை இழந்து 75 ரன்கள் குவித்து இருந்தது. அப்போது போட்டியின் இடையே மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி இந்த போட்டியின் ரிசல்ட் “டை” ஆனதாக அறிவிக்கப்பட்டது.

Shreyas Iyer

இப்படி போட்டியின் போது மழையோ அல்லது போட்டி நடத்த முடியாத மோசமான வானிலையோ அமையம் பட்சத்தில் டக் வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்படும். அப்படி இந்த விதிமுறை கடைபிடிக்கும் போது 99 சதவீதம் ஏதாவது ஒரு அணிக்கு நிச்சயம் ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது விக்கெட் வித்தியாசத்திலோ வெற்றி கிடைக்கும்.

- Advertisement -

ஆனால் இந்த விதிமுறை கடைபிடிக்கப்பட்டு போட்டி இரு அணிகளுக்கும் இடையே சமனில் முடிவது என்பது அரிதான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது, அந்த வகையில் ஏற்கனவே கடந்த ஆண்டு நெதர்லாந்து மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையேயான போட்டியும், மால்டா மற்றும் ஜிப்ரேல்ட்டர் அணிகளுக்கு இடையேயான போட்டியும் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி சமநிலையில் முடிந்தது.

இதையும் படிங்க : போட்டியோட இந்த ரிசல்ட் எனக்கு கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும் – தோல்விக்கு பிறகு டிம் சவுதி பேசியது என்ன?

அதனை தொடர்ந்து டி20 சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றாவது முறையாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டி மூன்றாவது முறையாக டக் வொர்த் லூயிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டும் “டை” ஆனது குறிப்பிடத்தக்கது. இப்படி டக் வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டும் நேற்றைய போட்டி “டை” ஆனது அரிதான நிகழ்வாக தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement