IND vs NZ T20 : மறக்க முடியுமா, கடந்த பயணத்தில் நியூசி மண்ணில் இந்தியா படைத்த உலக சாதனையும் – புள்ளி விவரங்களும் இதோ

Kohli Tim Southee IND vs NZ
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறியது. அந்த தொடரில் விராட் கோலி தவிர்த்து ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டதால் அவர்களுக்கு பதில் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அந்த நிலையில் ஏமாற்றமான உலக கோப்பைக்கு பின் நியூசிலாந்து பயணித்துள்ள இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் களமிறங்குகிறது.

அதில் முதலாவதாக நவம்பர் 18ஆம் தேதியன்று துவங்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போலவே ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற அனுபவம் வாய்ந்த ஹர்திக் பாண்டியா தலைமையில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் நடைபெற்ற பெரும்பாலான இருதரப்பு தொடர்களை ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே வென்ற இளம் இந்திய அணி இத்தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று 2024 டி20 உலகக்கோப்பை வெல்லும் பயணத்தை வெற்றியுடன் துவக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

வரலாற்று உலகசாதனை:
ஆனால் மறுபுறம் இந்தியா போலவே உலகக் கோப்பையில் அரையிறுதியில் தோற்றாலும் எப்போதுமே சொந்த மண்ணில் நியூசிலாந்து வலுவான அணியாக திகழ்கிறது. இருப்பினும் வரலாற்றில் நியூசிலாந்து மண்ணில் நிறைய சரித்திர வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா கடைசியாக கடந்த 2020இல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 5 போட்டிகள் கொண்ட மெகா டி20 தொடரில் பங்கேற்றது. ஆக்லாந்து நகரில் துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 204 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்து 2வது போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஹமில்டன் நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 179/5 ரன்கள் சேர்த்தது.

அதே 179 ரன்களை நியூசிலாந்தும் எடுத்ததால் டையில் முடிந்த அப்போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கொண்டு வரப்பட்டது. அதில் நியூசிலாந்து நிர்ணயித்த 18 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு டிம் சௌதீயை வெளுத்து வாங்கிய ரோகித் சர்மா 2 சிக்ஸர்களை பறக்க விட்டு த்ரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதனால் 3 – 0 எனத் தொடரை கைப்பற்றிய இந்தியா வெலிங்டன் நகரில் நடைபெற்ற 4வது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து குவித்த அதே 165 ரன்களை நியூசிலாந்தும் எடுத்ததால் மீண்டும் போட்டி டையில் முடிந்தது. அதனால் மீண்டும் கொண்டு வரப்பட்ட சூப்பர் ஓவரில் கேஎல் ராகுல் – விராட் கோலி ஆகியோர் அதிரடியாக செயல்பட்டு வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

அப்படி வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் கொண்டு வரப்பட்ட சூப்பர் ஓவரில் விராட் கோலி தலைமையில் வென்ற இந்தியா 5வது மற்றும் கடைசி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 5 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. அதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட தொடரை 5 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் செய்து வென்ற முதல் அணி என்ற புதிய உலக சாதனையையும் இந்தியா படைத்தது.

1. அந்த வகையில் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 20 போட்டிகளில் நியூசிலாந்தை எதிர்கொண்டுள்ள இந்தியா 11 வெற்றிகளை பதிவு செய்து அசத்தியுள்ளது. நியூசிலாந்து 9 போட்டிகளில் வென்றது.

- Advertisement -

2. அதேபோல் போட்டி நடைபெறும் நியூசிலாந்து மண்ணில் எதிர்கொண்ட 10 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்த இந்தியா 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

Rohith-2

3. டி20 போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து மண்ணில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய வீரர்களின் பட்டியல்:
1. ரோகித் சர்மா : 236
2. கேஎல் ராகுல் : 224
3. ஷ்ரேயஸ் ஐயர் : 153
4. விராட் கோலி : 105
5. எம்எஸ் தோனி : 91

4. நியூசிலாந்து மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளர்கள்:
1. ஷார்துல் தாகூர் : 8
2. ஜஸ்ப்ரித் பும்ரா : 6
3. கலீல் அஹமத்/யுஸ்வென்ற சஹால்/ரவீந்திர ஜடேஜா/ஹர்டிக் பாண்டியா : தலா 4

Advertisement