IND vs NZ : இந்திய அணி தோக்கனும்னே இப்படியெல்லாம் நடக்குதா? – 2 ஆவது போட்டியில் ஏற்பட்ட மாற்றம்

Shikhar-Dhawan-and-Gill
- Advertisement -

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஷிகார் தவான் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலாவது போட்டி கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

tom Latham IND vs NZ

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று (நவம்பர் 27) ஹேமின்டன் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி (1-1) என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய வாய்ப்பிருக்கும். பின்னர் அடுத்த போட்டியில் ஒருநாள் தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

இல்லையெனில் நியூசிலாந்து அணி இந்த தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. கடந்த போட்டியின் போது 300 ரன்களுக்கு மேல் குவித்தும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது வருத்தத்தை ஏற்படுத்தியது.

Rain

இந்நிலையில் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியை பாதிக்கும் விதமாக போட்டியின் இடையே மழை பெய்து வருகிறது. குறிப்பாக நான்கு புள்ளி ஐந்து (4.5) ஓவர்கள் முடிவில் இந்திய அணி 22 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் போட்டி தற்போது 50 ஓவர்களில் இருந்து 29 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தற்போது 12.5 ஓவர்களில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்திருக்கும் வேளையில் மீண்டும் மழை பெய்து போட்டி தடைபட்டுள்ளது. இதன்காரணமாக மேலும் இந்த போட்டியில் ஓவர்கள் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே நியூசிலாந்து அணி அவர்களின் நாட்டில் பலமாக இருப்பதோடு மட்டுமின்றி தற்போது ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : ஷர்துல் தாகூரை தூக்குனது ரைட். ஆனா இவரையும் ஏன் தூக்குனீங்க – மீண்டும் அணித்தேர்வு குறித்து காண்டான ரசிகர்கள்

அதோடு இரண்டாவதாக அவர்கள் பேட்டிங் செய்ய இருப்பது நிச்சயம் அந்த அணிக்கு சாதகமாக அமையும். எனவே இந்திய அணி தோற்பதற்காகவே இயற்கையும் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது என்பது போல நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement