IND vs NZ : அம்பயரின் முடிவுக்கு பின்னர் கட்டியணைத்த கேப்டன்கள் – இருந்த நல்ல வாய்ப்பும் போச்சா?

Abandoned
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி கடந்த 25-ஆம் தேதி ஆக்லாந்து நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Shikhar-Dhawan-and-Gill

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நவம்பர் 27-ஆம் தேதி இன்று ஹாமில்டன் நகரில் துவங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து 89 ரன்கள் குவித்திருந்த வேளையில் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டது.

ஏற்கனவே இந்த போட்டியின் ஐந்தாவது ஓவருக்கு முன்னதாக மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டதால் இந்த போட்டி 50 ஓவர்களில் இருந்து 29 ஓவர்களாக குறைக்கப்பட்ட வேளையில் மீண்டும் 13-வது ஓவரில் மீண்டும் மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. மேலும் கடந்த சில மணி நேரங்களாகவே மழை நிற்காமல் பெய்து வருவதால் போட்டி இன்றைய நாளில் நடத்த வாய்ப்பே இல்லை என்று அம்பயர்கள் முடிவு செய்தனர்.

Seden-Park-Rain

அதனைத்தொடர்ந்து மைதான பராமரிப்பாளர்களின் ஆலோசனைக்கு பிறகு போட்டியை நடத்த முடியாது என்று உறுதி செய்த அம்பயர்கள் இரு அணி கேப்டன்களிடமும் சென்று போட்டி கைவிடப்பட்டதாக அறிவித்தனர். அதனை இரண்டு அணியின் கேப்டன்களும் அம்பயரின் முடிவினை ஏற்றுக் கொண்டு கட்டி அணைத்தனர்.

- Advertisement -

பின்னர் வீரர்களும் தங்களுக்குள் கை கொடுத்தவாறு போட்டியை முடித்துக் கொண்டனர். ஏற்கனவே இந்த தொடரில் நியூசிலாந்து அணி ஒரு வெற்றியை பெற்று முன்னிலை வகிக்கும் வேளையில் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அருமையான வாய்ப்பு இருந்தும் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால் இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றும் வாய்ப்பினை இழந்துள்ளது.

இதையும் படிங்க : வீடியோ: கழற்றி விட்டாலும் மழைக்கு மத்தியில் சஞ்சு சாம்சன் செய்த மனம் உருகும் செயல் – இந்திய அணி நிர்வாகத்தை விளாசும் ரசிகர்கள்

அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரினை சமன்செய்ய முடியும். இல்லையென்றால் நியூசிலாந்து அணி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement