INDIA : இந்தியா மற்றும் நியூசிலாந்து போட்டி துவங்க தாமதம் – காரணம் இதுதான்

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது.

Kohli
- Advertisement -

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது போட்டி இன்று 13ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

india

- Advertisement -

நியூசிலாந்து அணியும் இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இதனால் இன்றைய இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பினை பெற்றுள்ளது. இருப்பினும் போட்டி மழையால் பாதிக்கப்படுமா என்ற அச்சமும் உள்ளது.

இந்நிலையில் போட்டி நடக்க உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருப்பதால் போட்டி துவங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பிட்சை பரிசோதித்த மைதான அதிகாரிகள் கூறியதாவது : பிட்ச் நன்றாகவே இருக்கிறது ஆனால் அவுட் ஃபீல்ட் இன்னும் ஈரத்தன்மை முழுவதுமாக போகவில்லை.

rain

எனவே சிறிது நேரம் காத்திருந்து போட்டியை துவங்கவே விரும்புகிறோம். இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடும்போது வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் எனவே மைதானத்தின் ஈரத்தன்மை நீங்க உடன் போட்டியை துவங்கலாம் என்று மைதான அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement