- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா – நியூஸிலாந்து 2வது டெஸ்ட் நடைபெறும் புனே மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் தோற்ற இந்திய ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. இதையடுத்து அதே வேகத்தில் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று முதல் முறையாக இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல நியூசிலாந்து தயாராகியுள்ளது.

மறுபுறம் 46க்கு ஆல் அவுட்டாக்கி மோசமான சாதனையை படைக்க வைத்த நியூசிலாந்தை இரண்டாவது போட்டியில் தோற்கடித்து பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இந்தியா போராட உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி அக்டோபர் 24ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மகாராஷ்டிராவில் உள்ள எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது.

- Advertisement -

புனே மைதானம்:

இந்த மைதானத்தில் கடந்த 2017 முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை நடைபெற்றுள்ள 2 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா ஒரு வெற்றி ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. முதல் முறையாக தற்போது நியூசிலாந்தை இம்மைதானத்தில் இந்தியா எதிர்கொள்கிறது. இம்மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி: இந்தியா 601-5, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2019. குறைந்தபட்ச ஸ்கோரை 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா (105 ஆல் அவுட்) பதிவு செய்துள்ளது.

வெதர் ரிப்போர்ட்:

இந்தப் போட்டி நடைபெறும் புனே கஹுன்ஜே பகுதிகளில் அக்டோபர் 24 – 28 ஆகிய தேதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. அதே சமயம் வானம் மேகமூட்டத்துடன் ஈரப்பதமான சூழ்நிலையும் பகல் நேரத்தில் வெப்பமான சூழ்நிலையும் நிலவும் என்று தெரிகிறது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

வரலாற்றில் புனே மைதானம் சுழலுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. இம்முறையும் அதே போல கருமண்ணால் பிட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளதாக செய்திகளும் காணப்படுகின்றன. அதனால் இந்தப் போட்டியில் ஸ்பின்னர்கள் வெற்றியை நிர்ணயிக்கக் கூடியவர்களாக அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். புதிய பந்திலும் ஆரம்பகட்ட நாட்களிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் சவாலை கொடுப்பார்கள்.

இதையும் படிங்க: சுப்மன் கில் உள்ளே வரும் பட்சத்தில் வெளியேறப்போவது யார்? கே.எல் ராகுலா? சர்பராஸ் கானா? – விவரம் இதோ

எனவே பேட்ஸ்மேன்கள் இங்கே பெரிய ரன்கள் குவிக்க சூழ்நிலையை உணர்ந்து செட்டிலாகி விளையாடுவது அவசியமாகிறது. வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் 430, 190, 237, 107 என்பது சராசரி 4 இன்னிங்ஸ்களின் ஸ்கோராகும். இங்கே பிட்ச் நாட்கள் செல்ல செல்ல பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

- Advertisement -