சுப்மன் கில் உள்ளே வரும் பட்சத்தில் வெளியேறப்போவது யார்? கே.எல் ராகுலா? சர்பராஸ் கானா? – விவரம் இதோ

Gill
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கழுத்து வலி இருப்பதாக கூறி முதல் போட்டிக்கு தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என்று அவர் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டார்.

இரண்டாவது போட்டியில் விளையாடப்போவது யார்? :

இதன் காரணமாக சுப்மன் கில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு நான்காவது இடத்தில் சர்பராஸ் கான் விளையாடி இருந்தார். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தற்போது சுப்மன் கில் முழு உடற்பகுதி அடைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக புனே நகரில் நாளை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது போட்டியில் அவர் விளையாடுவார் என்று தெரிகிறது. இந்நிலையில் சுப்மன் கில் உள்ளே வரும் பட்சத்தில் கே.எல் ராகுல் அல்லது சர்ஃபராஸ் கான் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறியாக வேண்டும். அந்த வகையில் இரண்டாவது போட்டியில் வெளியேறப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஏனெனில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது சர்பராஸ் கான் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அழுத்தத்தில் இருந்த வேளையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதே வேளையில் அனுபவ வீரரான கே.எல் ராகுல் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சேர்த்து மொத்தம் 12 ரன்கள் மட்டுமே அடித்தார்.

- Advertisement -

இதன் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டு சர்பராஸ் கான் அணியில் நீடிக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. ஆனால் அனுபவ வீரரான கே.எல் ராகுல் இருக்க வேண்டியது அவசியம் என்று ரோஹித் சர்மாவும், கம்பீரும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து பேசியிருந்த இந்திய அணியின் துணை பயிற்சியாளரான ரியான் டென் டெஸ்கோத்தே கூறுகையில் :

இதையும் படிங்க : கேப்டனா இருந்தாலும் 11 கோடி தான்.. ஷ்ரேயாஸ் ஐயரிடம் கெடுபுடி காட்டும் கே.கே.ஆர் – விவரம் இதோ

ஆறாவது வீரருக்கு இடத்திற்கு மட்டும் ஏழு பேர் போட்டி போடுவதாகவும் அதில் சரியான வீரர் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்றும் கூறியிருந்தார். இதன் காரணமாக எந்த வீரர் 6-ஆவது இடத்திற்கு வரப்போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இருப்பினும் கே.எல் ராகுல் தான் அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement