கேப்டனா இருந்தாலும் 11 கோடி தான்.. ஷ்ரேயாஸ் ஐயரிடம் கெடுபுடி காட்டும் கே.கே.ஆர் – விவரம் இதோ

Shreyas
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. கடந்த பல ஆண்டுகளாகவே ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த கொல்கத்தா அணிக்கு பெரிய இடைவெளிக்கு பின்னர் இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் கிடைத்தது அந்த அணியின் நிர்வாகத்தின் மத்தியிலும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு கண்டிஷன் போட்டுள்ள கே.கே.ஆர் :

இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது நடைபெறவுள்ள வேளையில் வலுவான அணியாக பார்க்கப்படும் கொல்கத்தா அணி எந்தெந்த வீரர்களை ரீடெயின் செய்யும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. அதேவேளையில் கொல்கத்தா அணியில் தரம் வாய்ந்த பல வீரர்கள் இருப்பதால் அவர்களின் சம்பளம் எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் இருந்தாலும் அவரை மூன்றாவது வீரராக 11 கோடி ரூபாய்க்கு தான் மீண்டும் ரீடெயின் செய்ய கொல்கத்தா அணி நிர்வாகம் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் 5 வீரர்களை மட்டுமே ரீடெயின் செய்யும் வாய்ப்பு மட்டுமே இருப்பதினால் முதல் வீரராக கொல்கத்தா அணி 18 கோடி ரூபாய்க்கு அதிரடி வீரரான ரசலை ரீடெயின் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோன்று இரண்டாவதாக வருண் சக்கரவர்த்தியை 14 கோடி ரூபாய்க்கும், மூன்றாவதாக ஷ்ரேயாஸ் ஐயரை 11 கோடி ரூபாய்க்கும், நான்காவது வீரராக சுனில் நரைனை 18 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்க கொல்கத்தா அணி ஆலோசித்து வருகிறது. அதே போன்று ஐந்தாவது வீரராக ரிங்கு சிங்கை 14 கோடிக்கும் தக்கவைக்க நினைப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அன் கேப்டு வீரராக ஹர்ஷித் ராணா அல்லது ரமன் தீப் சிங் ஆகிய இருவரில் ஒருவரை நான்கு கோடிக்கும் கொல்கத்தா அணி ரீடெயின் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருந்தாலும் அவருக்கு 11 கோடி ரூபாய் தான் என்று கொல்கத்தா அணி நிர்பந்திக்கும் பட்சத்தில் அவர் அதற்கு ஒப்புக் கொள்வாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : சுமாரான ஃபார்மில் இருக்கும் சிராஜ்.. 2வது டெஸ்டில் நீக்கப்படுவாரா? துணை கோச் ரியன் பதில்

ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றாமல் தவித்து வந்த கொல்கத்தா அணி தற்போது தான் ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் கோப்பையை வென்றுள்ளதால் அவர் நிச்சயம் கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் தனது நிபந்தனையை தெரிவிப்பார் என்றும் ஒருவேளை சுமூக உடன்பாடு ஏற்படவில்லை என்றால் அவர் கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement