- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா – நியூசி முதல் டி20 நடைபெறும் நாக்பூர் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் முறையாக சொந்த மண்ணில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. விரைவில் துவங்கும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அத்தொடரில் வெல்ல இரு அணிகளும் தயாராகியுள்ளன.

குறிப்பாக ஒருநாள் தொடரில் வரலாறு காணாத தோல்வியை பரிசளித்த நியூசிலாந்தை டி20 தொடரில் வீழ்த்தி பதிலடி கொடுக்க சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தயாராக இருக்கின்றது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அத்தொடர் ஜனவரி 21ஆம் தேதி நாக்பூரில் துவங்க உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் வரலாற்றில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் 25 போட்டிகளில் மோதியுள்ளன.

- Advertisement -

நாக்பூர் மைதானம்:

அதில் இந்தியா 14, நியூசிலாந்து 10 வெற்றிகளை பெற்றுள்ளன. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இத்தொடரின் முதல் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் இருக்கும் விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. 2008இல் தோற்றுவிக்கப்பட்ட இம்மைதானம் 45000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இம்மைதானத்தில் வரலாற்றில் இந்திய அணி 5 டி20 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் 2 தோல்விகளை சந்தித்துள்ளது. குறிப்பாக 2016 டி20 உலகக் கோப்பையில் இங்கு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்றுள்ளது.

வெதர் ரிப்போர்ட்:

ஜனவரி 21ஆம் தேதி விதர்பாவில் மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் அறிக்கை தெரிவிக்கின்றது. வெப்பம் 17 – 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

விதர்பா மைதானத்தின் பிட்ச் இயற்கையாக பவுலர்களுக்கு சாதகமாக இருந்து வருகின்றது. இங்குள்ள பிட்ச் நேரம் செல்ல செல்ல ஸ்லோவாக மாறக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. அதனால் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்ஸ், ஸ்விங் ஆகியவற்றைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்களுக்கு சவாலைக் கொடுப்பார்கள். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

எனவே ரன்கள் குவிப்பதற்கு பேட்ஸ்மேன்கள் பிட்ச், சூழ்நிலையைப் படித்து பொறுப்புடன் விளையாடுவது அவசியமாகும். வரலாற்றில் இங்கு நடைபெற்ற 13 சர்வதேச டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 146. இங்கு 8 முறை 150க்கும் குறைவான ரன்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை தரம் குறைக்கும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ

வெறும் 1 முறை மட்டுமே 190க்கும் மேற்பட்ட ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. இங்கே 9 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 4 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

- Advertisement -