- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா – நியூஸிலாந்து முதல் ஒன்டே நடக்கும் வதோதரா மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் முதலாவதாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அந்தத் தொடரில் இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுகிறார்கள். எனவே அனுபவமும் இளமையும் கொண்ட இந்திய அணி நியூசிலாந்தை தோற்கடித்து புத்தாண்டை வெற்றிகரமாக துவங்கத் தயாராகியுள்ளது.

மறுபுறம் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து வெற்றி பெற நியூசிலாந்து அணியும் தயாராகியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மொத்தம் 120 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 62 வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது. நியூசிலாந்து 50 வெற்றிகள் பெற்றுள்ள நிலையில் 1 போட்டி சமனில் முடிந்தது. 7 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -

வதோதாரா மைதானம்:

இத்தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் அவ்விரு அணிகளும் 40 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 31 வெற்றிகள் பெற்ற இந்தியா சொந்த மண்ணில் கில்லியாக மிரட்டி வருகின்றது. நியூசிலாந்து வெறும் 8 போட்டிகளில் வென்ற நிலையில் 1 போட்டி சமனில் முடிந்தது. இத்தொடரின் முதல் போட்டி குஜராத்தில் இருக்கும் வதோதரா நகரில் உள்ள கொட்டம்பி மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு துவங்குகிறது.

40000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானம் 2024ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு இதுவரை எந்த ஆடவர் சர்வதேச போட்டிகளும் நடந்ததில்லை. இதற்கு முன் இங்கு 3 மகளிர் ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இப்போது தான் முதல் முறையாக ஆடவர் சர்வதேச போட்டி நடைபெற உள்ளது.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:

ஜனவரி 11ஆம் தேதி வதோதரா மழை பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. வெப்பம் 13 – 28 டிகிரி செல்சியஸ் அளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்தப் போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:

வதோதரா மைதானத்தின் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் அதிக சாதகமாக இருந்து வருகின்றது. குறிப்பாக 2024இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த 2 போட்டிகளிலும் இந்திய மகளிரணி 300+ ரன்கள் அடித்தது. எனவே சூழ்நிலையை படித்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்த 3 பேரும் சதமடிப்பார்கள் – இர்பான் பதான் கருத்து

புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மிடில் ஓவர்களில் துல்லியமாக பந்து வீசும் ஸ்பின்னர்கள் ஆதிக்கத்தை செலுத்தக்கூடும். இங்கே டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம். அதே சமயம் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

- Advertisement -