IND vs NZ : முதல் ஒன்டே நடைபெறும் ஹைதராபாத் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளி விவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Hyderabad Cricket Ground Stadium
- Advertisement -

இலங்கைக்கு எதிராக முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் வெற்றியுடன் கைப்பற்றி 2023 புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் சொந்த மண்ணில் களமிறகங்கும் இந்தியா முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் மற்றுமொரு தொடராக நடைபெறும் இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணி களமிறங்குகிறது.

மேலும் பொதுவாகவே சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி கில்லியாக செயல்பட்டு வரும் இந்தியா இலங்கையை தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் இத்தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல போராட உள்ளது. மறுபுறம் சமீபத்தில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 2 – 1 (3) என்ற கணக்கில் மண்ணை கவ்வ வைத்து விட்டு இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணியை கேன் வில்லியம்சன் ஓய்வெடுப்பதால் டாம் லாதம் வழி நடத்துகிறார். கடந்த நவம்பரில் தங்களது சொந்த மண்ணில் இந்தியாவை 1 – 0 (3) என்ற கணக்கில் அவரது தலைமையில் தோற்கடித்த நியூசிலாந்து தற்போது பாகிஸ்தானையும் வீழ்த்தியுள்ளது.

- Advertisement -

புள்ளிவிவரங்கள்:
எனவே அந்த புத்துணர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் டேவோன் கான்வே, கிளன் பிலிப்ஸ் போன்ற தேவையான அளவு தரமான வீரர்களைக் கொண்டுள்ள நியூசிலாந்து இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை வெல்ல போராட உள்ளது. அந்த வகையில் டாப் 2 அணிகளாக கருதப்படும் இந்தியாவும் நியூசிலாந்தின் வரலாற்றில் 113 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

அதில் 55 போட்டியில் வென்றுள்ள இந்தியாவுக்கு 50 போட்டிகளில் ஒன்று நியூசிலாந்தின் சவாலை கொடுத்து வருகிறது. 1 போட்டி சமனில் முடிந்தது. 7 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. குறிப்பாக தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் எதிரணிகளும் மோதிய 35 போட்டிகளில் இந்தியா 26இல் வென்று வலுவாக உள்ளது. நியூசிலாந்து 8 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது. 1 போட்டி சமனில் முடிந்தது.

- Advertisement -

ஹைதராபாத் மைதானம்:
அப்படி எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 18ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் இருக்கும் புகழ் பெற்ற ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு துவங்குகிறது. கடந்த 2004இல் தோற்றுவிக்கப்பட்டு 55,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் வரலாற்றில் 6 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய இந்தியா 3 வெற்றியையும் 3 தோல்வியையும் பதிவு செய்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக இப்போது தான் முதல் முறையாக இங்கு விளையாடுகிறது.

இந்த மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (233) மற்றும் அதிக சதங்கள் (2) அடித்த இந்திய வீரராக 233 ரன்களுடன் யுவராஜ் சிங் உள்ளார். இங்கு அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் சச்சின் டெண்டுல்கர் : 175, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2009. இங்கு அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலராக உமேஷ் யாதவ் (6 விக்கெட்கள்) உள்ளார்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
இம்மைதானத்தில் இருக்கும் பிட்ச் முதல் இன்னிங்ஸில் சீரான வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை கொண்டிருப்பதால் பெரும்பாலும் வரலாற்றில் பேட்டிங்க்கு சாதகமாகவே இருந்து வருகிறது. அதனால் நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பெரிய ரன்களை குவிக்கலாம். அதிலும் குறிப்பாக கடைசியாக கடந்த அக்டோபரில் இங்கு நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 187 ரன்களை கடைசி ஓவரில் சேசிங் செய்து இந்தியா வென்றது.

அதே சமயம் போட்டி நடைபெறும் நடைபெற மெதுவாக மாறி ஸ்பின்னர்களுக்கு கை கொடுக்கும் தன்மையை ஹைதராபாத் மைதானம் கொண்டது. அத்துடன் வேகப்பந்து வீச்சாளர்கள் வழக்கமாக ஸ்விங் ஸ்விங் கிடைத்தால் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். குறிப்பாக வரலாற்றில் இங்கு நடைபெற்ற 6 ஒருநாள் போட்டிகளில் முதல் இன்னிங்ஸ் 270 ரன்களாக இருக்கும் சராசரி ஸ்கோர் 2வது இன்னிங்ஸில் 250 ரன்களாக குறைகிறது.

- Advertisement -

மேலும் வரலாற்றில் இங்கு முதலில் பேட்டிங் செய்த அணி 3 ஒருநாள் போட்டிகளிலும் சேசிங் செய்த அணி 3 போட்டிகளிலும் பெற்றுள்ளது. எனவே இம்மைதானம் பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று நம்மலாம். அதனால் டாஸ் வெல்லும் கேப்டன் எந்த முடிவெடுத்தாலும் வெற்றிக்கு சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது.

இதையும் படிங்க: தோனியை பத்தி தெரியும்? ஆனா அவரோட அண்ணன பத்தி தெரியுமா? – யார் இந்த நரேந்திர சிங் தோனி – விவரம் இதோ

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் நாளன்று ஹைதராபாத் நகரில் மழைக்கான வாய்ப்பில்லை என்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

Advertisement