IND vs IRE : முதல் போட்டியை போன்றே இன்றைய மூன்றாவது போட்டியிலும் சிக்கல் இருக்காம் – அப்போ டாஸ் ரொம்ப முக்கியம்

IND-vs-IRE
- Advertisement -

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது இன்று ஆகஸ்ட் 23-ஆம் தேதி டப்ளின் நகரில் இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்று இரண்டு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது.

IND-vs-IRE

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்த மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று அயர்லாந்து அணியை வாஷ் அவுட் செய்ய காத்திருக்கிறது. அதேபோன்று இந்த தொடரில் ஒரு ஆறுதல் வெற்றியையாவது பெரும் முனைப்புடன் அயர்லாந்து அணி தயாராகியுள்ளது.

எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த மூன்றாவது டி20 போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை கைப்பற்றியுள்ளதால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

IND-vs-IRE

இப்படி இருக்கையில் இந்த மூன்றாவது டி20 போட்டி முதல் போட்டியை போன்றே மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் மழை குறுக்கீடு காரணமாக டக் வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இதையும் படிங்க : 2011 உ.கோ : கேரி கிறிஸ்டன் வேணும்னு சொல்லியும் தோனி தான் ரோஹித்தை கழற்றி விட்டாரு – முன்னாள் செலக்ட்ர் பேட்டி

அதேபோன்று இந்த மூன்றாவது போட்டியும் ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் வேளையில் டக் வொர்த் லூயிஸ் விதிமுறை கடைபிடிக்கப்படும் என்பதனால் இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கையே தேர்வு செய்ய விரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement