இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவதாக நடைபெற்ற 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணியும் கைப்பற்றின. இதற்கடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. அடிலெய்டில் நடைபெறும் முதல் போட்டி பகலிரவு போட்டியாக அமைய உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி மாதம் பாதி நாட்கள் வரை நடைபெறும் அதனை தொடர்ந்து அடுத்த தொடர் என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவு இருந்தது.
இதற்கு விடையாக தற்போது பிசிசிஐ இந்தியாவில் நடத்தவுள்ள அடுத்த தொடருக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி மாதம் இந்தியாவில் போட்டிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5th t20 போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இந்தத் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி துவங்க உள்ள முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும். அதனை தொடர்ந்து மற்றொரு டெஸ்ட் போட்டியும் அங்கேயே நடைபெறவிருக்கிறது. மீதமுள்ள இரண்டு போட்டிகள் குஜராத் மாநிலம் மோதிரா மைதானத்தில் நடைபெற உள்ளது என்று தற்போது உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் சென்னை ரசிகர்கள் தற்போது ஆரவாரத்தில் காணப்படுகின்றனர்.
கடைசியாக சென்னையில் டெஸ்ட் போட்டிகள் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி சென்னையில் டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடியது. அதனைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இங்கிலாந்து அணியே சென்னையில் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தற்போது தமிழக ரசிகர்கள் உற்சாகத்தில் காணப்படுகின்றனர்.
வெகுவிரைவில் போட்டியில் நடைபெற அனைவரும் நேரில் காண தயாராக இருங்கள் இருப்பினும் கொரோனா விதிமுறைகள்படி சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா ? அல்லது எந்த சதவிகிதத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும். அதனை நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துவோம்.