இந்தியா – இங்கிலாந்து போட்டியில் வெல்லபோவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன? – விரிவான அலசல்

- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 29ஆம் தேதி மதியம் 2 மணிக்கு லக்னோவில் நடைபெறும் 29வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இத்தொடரில் அடித்து நொறுக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தி செமி ஃபைனலில் முதல் அணியாக இருக்கும் என்று ஏராளமான முன்னாள் வீரர்கள் ஆரம்பத்தில் கணித்தனர்.

ஆனால் களத்தில் அப்படியே நேர்மாறாக செயல்பட்ட இங்கிலாந்து 5 போட்டிகளில் 4 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு சரிந்து செமி ஃபைனல் வாய்ப்பை 90% கோட்டை விட்டுள்ளது. குறிப்பாக கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக தோற்ற அந்த அணி சற்று பலவீனமான இலங்கையிடம் 156 ரன்கள் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

வெல்லப்போவது யார்:
ஆனால் மனமடைந்துள்ள அந்த அணி பேட்டிங் துறையில் டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஹரி ப்ரூக் மற்றும் கேப்டன் பட்லர் ஆகியோர் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதே போல லியம் லிவிங்ஸ்டன், மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடக்கூடிய மகத்தான ஆல் ரவுண்டர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுடன் சம் கரண், கிறிஸ் ஓக்ஸ், மார்க் வுட் ஆகியோர் பேட்டிகளும் ஓரளவு மிரட்டக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களாக பலம் சேர்க்கின்றனர்.

மேலும் அடில் ரசித் முதன்மை ஸ்பின்னராக தரமாக இருக்கும் நிலையில் டேவிட் வில்லி, கஸ் அட்கின்சன் ஆகியோர் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்கின்றனர். இப்படி தரமான வீரர்கள் இருந்தும் களத்தில் சுமாராக செயல்படுவதை இங்கிலாந்தின் பிரச்சினையாக இருக்கிறது. செமி ஃபைனல் வாய்ப்பு கிட்டத்தட்ட கைநழுவி போனதால் இனி தோற்பதற்கு எதுவுமில்லை என்ற எண்ணத்துடன் இந்தியாவுக்கு எதிராக இவர்கள் ஒன்றாக சேர்ந்து இங்கிலாந்தின் வெற்றிக்கு போராடுவார்கள் என்று நம்பலாம்.

- Advertisement -

மறுபுறம் இந்திய அணியில் பேட்டிங் துறையில் கேப்டன் ரோகித் சர்மா, கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் பலம் சேர்க்கும் வீரர்களாக இருக்கின்றனர். குறிப்பாக ஸ்ரேயாஸ் தவிர்த்து அனைவரும் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் பாண்டியா வரவில்லை என்றாலும் நிலைமையை சமாளிக்க சூரியகுமார் யாதவ் தம்முடைய தரத்தை நிரூபிப்பதற்காக தயாராக இருக்கிறார். அதே போல ஆல் ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா இருதுறைகளிலும் வலு சேர்க்கிறார்.

மேலும் கிடைத்த முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு மிரட்டிய ஷமியுடன், பும்ரா, சிராஜ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் ஸ்பின்னர்களும் பவுலிங் துறையை வலுபடுத்துகின்றனர். அதனால் ஏற்கனவே 5 வெற்றிகளை பெற்ற இந்தியா சொந்த மண்ணில் இங்கிலாந்தையும் சிறப்பாக எதிர்கொண்டு இப்போட்டியில் 6வது வெற்றியை பதிவு செய்யும் என்று நம்பலாம்.

- Advertisement -

வரலாற்று புள்ளிவிவரம்:
1. ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாற்றில் இவ்விரு அணிகளும் மோதிய 106 போட்டிகளில் இந்தியா 57 வெற்றிகளை பதிவு செய்து வலுவாக செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து 44 போட்டிகளில் வென்ற நிலையில் 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. 2 போட்டிகள் டையானது. இருப்பினும் உலகக்கோப்பை வரலாற்றில் மோதிய 8 போட்டிகளில் இங்கிலாந்து 4 முறை வென்று முன்னிலையில் இருக்கும் நிலையில் இந்தியா 3 வெற்றிகளை பதிவு செய்தது. 1 போட்டி (2011இல்) டையானது.

இதையும் படிங்க: அதெல்லாம் ஓவர்ரேட்டட்.. நம்பர் ஒன் பேட்ஸ்மேன்னு வெளியே சொல்லிக்காதீங்க.. பாபர் அசாமை விளாசிய கம்பீர்

2. ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் (1546) அடித்த இந்திய வீரராக எம்எஸ் தோனியும் அதிக சதங்கள் (4) மற்றும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக யுவராஜ் சிங்கும் சாதனை படைத்துள்ளனர். மேலும் அதிக விக்கெட்களை (38) எடுத்த இந்திய வீரராக ரவீந்திர ஜடேஜா சிறந்த பவுலிங்கை (6/19) பதிவு செய்த வீரராக ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் 387 ரன்களாகும்.

Advertisement