இந்தியா – இங்கிலாந்து மோதும் 4வது டெஸ்ட் நடைபெறும் ராஞ்சி மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை அதற்கடுத்த 2 போட்டிகளில் தோற்கடித்த இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே வென்று கம்பேக் கொடுத்த இந்தியா 4வது போட்டியிலும் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்ற போராட உள்ளது.

மறுபுறம் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்த இங்கிலாந்து அணியினர் இப்போதும் பஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி இந்தியாவை தோற்கடிப்போம் என்று விடாப்பிடியாக நிற்கின்றனர். அதனால் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நான்காவது போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

ராஞ்சி மைதானம்:
ராஞ்சியின் அடையாளமாக திகழும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் சொந்த ஊரில் உள்ள இம்மைதானம் 39000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கே 2017 முதல் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 2 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அந்த 2 போட்டிகளிலும் விளையாடி 1 வெற்றி 1 டிராவை பதிவு செய்துள்ள இந்தியா முதல் முறையாக தற்போது இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

இம்மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் (212) மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (212 தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2019) அடித்த வீரராக தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார். இங்கே அதிக விக்கெட்டுகளை (12) எடுத்து சிறந்த பவுலிங்கை (5/124, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2017) பதிவு செய்த பவுலராக ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் உள்ளார். இங்கு அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் அடித்துள்ள அணி : இந்தியா – 603/9, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2017

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் ராஞ்சி நகரில் பிப்ரவரி 25, 27 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு 70% வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே கடைசி 3 நாட்களில் மழையின் குறுக்கீட்டுக்கு மத்தியில் இப்போட்டி நடைபெற்று முடிவு கிடைக்கும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
இந்தியாவின் மற்ற மைதானங்களைப் போலவே ராஞ்சி மைதானமும் முதல் 2 நாட்களில் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும். எனவே அதை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே ரன்கள் எடுத்துக் கொள்வது அவசியம். அதே போல ஆரம்பக்கட்ட நாட்களில் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் என்பதால் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய விக்கெட்டுகளை எடுப்பார்கள்.

இதையும் படிங்க: இதுக்கு முன்னாடி இப்படி பாத்ததே இல்ல.. என்ன நடக்கும்ன்னு தெரியல.. இந்தியாவின் திட்டத்தை விளாசிய ஸ்டோக்ஸ்

இருப்பினும் நாட்கள் செல்ல செல்ல பிட்ச் மெதுவாக மாறி கடைசி 2 நாட்களில் ஸ்பின்னர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றியை நிர்ணயிப்பவர்களாக இருப்பார்கள். இந்த மைதானத்தில் 474, 382, 168 என்பது சராசரி முதல் 3 இன்னிங்ஸ்களின் சராசரி ஸ்கோராகும். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement