டெஸ்டில் கிடைத்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? – முன்னோட்டம், வரலாற்று சாதனை புள்ளிவிவரங்கள் இதோ

- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 1 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் முதலாவதாக 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கியது. பர்மிங்காமில் விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில் முதல் 3 நாட்களில் அபாரமாக செயல்பட்ட இந்தியா கடைசி 2 நாட்களில் சொதப்பி 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

Joe Root Jonny Bairstow Rishabh Pant IND vs ENg

- Advertisement -

அதனால் 2007க்கு பின்பு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லவதற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா 2 – 2 என்ற கணக்கில் கோப்பையை பகிர்ந்து கொண்டது. இப்போட்டியில் களமிறங்க காத்திருந்த கேப்டன் ரோகித் சர்மா கடைசி நேரத்தில் விலகியதால் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத பும்ரா தலைமையிலான இந்தியாவை மிரட்டிய பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து மண்ணை வைத்தது இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

பதிலடி கொடுப்பாரா ரோஹித்:
இதையடுத்து ஜூலை 7-ஆம் தேதியன்று இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துவங்குகிறது. இத்தொடருக்காக ஏற்கனவே 2 அணிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா குணமடைந்து இந்த டி20 தொடரில் இந்தியாவை வழி நடத்த உள்ளது பலமாக பார்க்கப்படுகிறது. எனவே தாம் இல்லாத சமயத்தில் இந்தியாவுக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு இந்த டி20 தொடரில் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு ரோகித் சர்மா தக்க பதிலடி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

NED vs ENG Buttler

முன்னோட்டம்:
இங்கிலாந்து: அந்த நிலையில் சுமாரான பார்ம் மற்றும் காயம் காரணமாக இங்கிலாந்தை அதிரடி படையாக மாற்றி உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் இயன் மோர்கன் கடந்த வாரம் ஓய்வு பெற்றாலும் அவரது இடத்தில் புதிய கேப்டனாக ஜோஸ் பட்லர் அறிவிக்கப்பட்டுள்ளார். சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் 863 ரன்களைக் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று கடந்த மாதம் கத்துக்குட்டியான நெதர்லாந்தை அடுத்தடுத்த சதங்கள் விளாசி வதம் செய்து முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் அவர் இந்த தொடரின் வாயிலாக தனது புதிய கேப்டன்ஷிப் பயணத்தை துவங்குகிறார்.

- Advertisement -

மேலும் ஜேசன் ராய், மொய்ன் அலி, டேவிட் மாலன், சாம் கரண் போன்ற அதிரடியான நட்சத்திர வீரர்களை கொண்ட இங்கிலாந்து எப்போதுமே தனது சொந்த மண்ணில் வலுவான அணியாகும். எனவே புதிய கேப்டன் பட்லர் தலைமையில் முதல் முறையாக களமிறங்கும் இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்டில் அதிரடி காட்டியதை பார்த்து மேலும் புத்துணர்ச்சியுடன் இந்தியாவை சாய்த்து இந்த டி20 தொடரை வெல்ல தயாராகியுள்ளது.

IND Team

இந்தியா: மறுபுறம் டெஸ்ட் போட்டியை முடித்துள்ள விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் 2-வது போட்டியிலிருந்து தான் களமிறங்கவுள்ளனர். இருப்பினும் சமீபத்திய தென் ஆப்பிரிக்க மற்றும் அயர்லாந்து தொடர்களில் அசத்திய இஷான் கிசான், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர்கள் இந்தியாவுக்கு வலுசேர்க்கின்றனர்.

- Advertisement -

மேலும் இப்போட்டிக்காக பங்கேற்ற 2 பிரத்தியேக கவுண்டி அணிகளுக்கு எதிரான பயிற்சி போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்தியா வென்றது. எனவே அந்த புத்துணர்ச்சியுடன் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கி டெஸ்ட் போட்டியில் கிடைத்த தோல்விக்கு இந்த டி20 தொடரில் வென்று தக்க பதிலடியும் பழி தீர்க்கவும் இந்தியா போராட உள்ளது.

INDvsENG

புள்ளிவிவரம்:
1. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 10 போட்டிகளில் வென்று இந்தியா முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்து 9 போட்டிகளில் வென்றது.

- Advertisement -

2. ஆனால் தொடர் நடைபெறும் இங்கிலாந்து மண்ணில் இவ்விரு அணிகள் மோதிய 6 போட்டிகளில் இங்கிலாந்து 4 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்தியா 2 வெற்றிகளை மட்டுமே பெற்றது.

IND-vs-ENG

3. இருப்பினும் கடைசியாக கடந்த 2018இல் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா கோப்பையை வென்று சாதனை படைத்தது.

4. வரலாற்றில் இவ்விரு அணிகள் மோதிய டி20 போட்டிகளில் ஒரு போட்டியில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் : இந்தியா 224/2, 2021. வரலாற்றில் இவ்விரு அணிகள் மோதிய டி20 போட்டிகளில் ஒரு போட்டியில் பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் : இங்கிலாந்து 80க்கு ஆல்-அவுட், 2012.

INDvsENG

5. இவ்விரு அணிகள் மோதிய டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் : விராட் கோலி – 577 ரன்கள். இவ்விரு அணிகள் மோதிய டி20 போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவுசெய்த பேட்ஸ்மேன்: கேஎல் ராகுல் – 101* ரன்கள்.

6. இவ்விரு அணிகள் மோதிய டி20 போட்டிகளில் அதிக ரசிகர்களை பறக்கவிட்ட பேட்ஸ்மென் : ஜேசன் ராய் – 18.

இதையும் படிங்க : தல தோனியின் பிறந்தநாளுக்கு இந்தியாவே வியக்கும் வகையில் ரசிகர்கள் செய்த வைரல் சம்பவம் – முழுவிவரம்

7. இவ்விரு அணிகள் மோதிய டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் : யுஸ்வென்ற சஹால் – 12. இவ்விரு அணிகள் மோதிய டி20 போட்டிகளில் ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் : யுஸ்வென்ற சஹால் – 6/25.

Advertisement