தல தோனியின் பிறந்தநாளுக்கு இந்தியாவே வியக்கும் வகையில் ரசிகர்கள் செய்த வைரல் சம்பவம் – முழுவிவரம்

Dhoni-4
- Advertisement -

இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இந்தியா கண்ட மகத்தான கிரிக்கெட் வீரர்களில் முக்கியவராக போற்றப்படுகிறார். ஏனெனில் கிரிக்கெட் மிகவும் பிரபலமடையாத ராஞ்சி போன்ற சிறிய நகரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து நாட்டுக்காக சர்வதேச அரங்கில் விளையாட வேண்டுமென்ற லட்சியத்துடன் படிப்படியாக முன்னேறி இன்று 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே இந்திய கேப்டனாக மாபெரும் சரித்திர படைத்துள்ளார்.

கிரிக்கெட்டுக்காக ரயில்வே டிக்கெட் கலெக்டர் பணியையும் விடுத்து உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி 2004இல் ஜாம்பவான் சௌரவ் கங்குலி நம்பிக்கையைப் பெற்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் தனது அதிரடியான பேட்டிங் மற்றும் அற்புதமான விக்கெட் கீப்பிங்கால் அனைவரையும் ஈர்த்தார். ஆரம்பகட்ட போட்டிகளில் தடுமாறினாலும் அதன்பின் அதிரடியாக விளையாடிய அவர் மின்னல் வேக விக்கெட் கீப்பிங் வாயிலாக ஓய்வு பெறும் வரை இந்தியாவின் முதன்மை விக்கெட் கீப்பராக உருவெடுத்தார்.

- Advertisement -

சொல்லப்போனால் விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற தற்போதைய இந்திய அணியின் நிலைமை இவர் வந்த பின்புதான் உருவானது. அந்த வகையில் இந்திய விக்கெட் கீப்பர்களின் அடிப்படை இலக்கணத்தை மாற்றியவர் எம்எஸ் தோனி என்றால் மிகையாகாது.

பன்முக தோனி:
அதேபோல் 2007இல் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்பில் அனுபவமும் இளமையும் கலந்த அணியை சிறப்பாக வழிநடத்தி பரம எதிரியான பாகிஸ்தானை பைனலில் தோற்கடித்து வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த அவர் இந்தியாவின் நலனுக்காக வாழ்நாளின் பெரும்பாலான போட்டிகளில் மிடில் ஆர்டரில் களமிறங்கி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதனால் இந்தியா தோற்கயிருந்த எத்தனையோ போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் அவரது இயற்கையான திறமை வெளிப்பட்டது

- Advertisement -

அதன் வாயிலாக உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பினிஷர்களில் முதன்மையானவராக போற்றப்படும் அவர் கங்குலி உருவாக்கிய தரமான வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் 2011 உலக கோப்பையை வென்று காட்டினார். அதேபோல் 2013இல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்களை வைத்து இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி என்று தாம் ஒரு மிகச் சிறந்த கேப்டன் என்று நிரூபித்தார். மேலும் இன்றைய இந்திய அணியில் விளையாடும் 70% க்கும் மேற்பட்ட வீரர்கள் தோனியின் ஆதரவால் உலகத்தரம் வாய்ந்தவர்களாக வளர்ந்துள்ளோம் என்பதை அவர்களே பலமுறை கூறுவதைப் பார்க்க முடிகிறது.

அப்படி அதிரடியான பேட்ஸ்மேன், மின்னல்வேக விக்கெட் கீப்பர், 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன், இளம் வீரர்களை கண்டறிந்து இந்தியாவின் வருங்காலத்தை வளமாக்கிய நல்ல தலைவன் என பன்முகங்களைக் கொண்ட எம்எஸ் தோனி ஐபிஎல் தொடரிலும் 4 கோப்பைகளை வென்று போட்டிகளின் அடிப்படையில் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக திகழ்கிறார்.

- Advertisement -

2010இல் முதல் முறையாக இந்தியாவை நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக தரம் உயர்த்திய அவர் பெறாத வெற்றிகளும் இல்லை, வாங்காத கோப்பைகளும் இல்லை என்றே கூறலாம். அதனால் பல இளம் வீரர்களுக்கும் கோடி கணக்கான இளைஞர்களுக்கும் ரோல் மாடலாக திகழும் அவர் கடந்த 2020 இந்திய சுதந்திர தினத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சாதாரண இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கே உரித்தான ஸ்டைலில் அறிவித்தார்.

41வது பிறந்தநாள்:
தற்போது 40 வயதை கடந்துள்ள அவர் தொடர்ந்து சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் நிலையில் ஜூலை 7-ஆம் தேதியன்று தனது 41-வது வயதில் காலடி வைப்பதால் அதை தனது குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக லண்டனுக்கு சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலைமையில் அவரின் பிறந்தநாளை பெரும்பாலான ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் கணிசமான ரசிகர்கள் நிஜ வாழ்விலும் கொண்டாட தயாராகியுள்ளனர்.

ஆனால் அவர்கள் அனைவருக்கும் டஃப் கொடுக்கும் வகையில் ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் இருக்கும் தோனியின் ரசிகர்கள் அவரின் 41-ஆவது பிறந்தநாளை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் 41 அடி கொண்ட பிரம்மாண்ட கட் அவுட் அமைத்து கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

அதுவும் ஒவ்வொரு இந்திய ரசிகனும் நினைத்தாலே புல்லரிக்கும் 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் தோனி சிக்ஸர் பறக்கவிட்டு இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த தருணத்தில் கிளிக் செய்யப்பட்ட புகைப்படத்தை அவர்கள் மாபெரும் கட் அவுட்டாக அமைத்து தங்களது ரோல்மாடல் மற்றும் ஹீரோவின் பிறந்தநாளை பிரம்மாண்ட முறையில் கொண்டாட தயாராகியுள்ளது உண்மையாகவே பிரமிப்பான அம்சமாகும். இந்த மாபெரும் கட் அவுட் அப்பகுதியில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அளவில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement