இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட் நடைபெறும் விசாகப்பட்டினம் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

Vishakapatnam Vizag Stadium
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. அத்தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2வது இன்னிங்ஸில் 231 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் பரிதாபமாக தோற்றது.

எனவே இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க 2வது போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்க உள்ளது. அப்போட்டியில் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயத்தால் வெளியேறியுள்ள நிலையில் விராட் கோலியும் இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவாகவே பார்க்கிறது. இருப்பினும் நிலைமையை சமாளித்து வெற்றி பெற இந்தியா அதீத தன்னம்பிக்கை மற்றும் அஜாக்கிரதை இல்லாமல் பேட்டிங், பவுலிங் துறைகளில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

- Advertisement -

விசாகப்பட்டினம் மைதானம்:
அந்த வகையில் இந்தியா கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ள இப்போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் நகரில் இருக்கும் ஏசிஏ-விடிசிஏ மைதானத்தில் துவங்க உள்ளது. 2003இல் தோற்றுவிக்கப்பட்டு 25000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 2016 முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் இதுவரை நடைபெற்றுள்ள 2 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக 2016ஆம் ஆண்டு இங்கு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இங்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (303), அதிக சதங்கள் (2) அடித்த வீரராக தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் மயங் அகர்வால் : 215, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2019. இங்கு அதிக விக்கெட்டுகள் (16) எடுத்து சிறந்த பவுலிங்கை (7/145, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2019) பதிவு செய்த பவுலராக ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இங்கு அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி இந்தியா : 502/7, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2019

வெதர் ரிப்போர்ட்:
விசாகப்பட்டினம் சுற்றிய பகுதிகளில் அடுத்த 5 நாட்களும் மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
இந்தியாவின் இதர மைதானங்களைப் போலவே விசாகப்பட்டினம் மைதானமும் ஆரம்ப நாட்களில் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும். எனவே ஆரம்பக்கட்ட நாட்களில் சூழ்நிலைகளை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை அடிக்க முடியும். அதே போல இங்கு சுழல் மற்றும் வேகம் ஆகிய 2 வகையான பவுலர்களும் சமமான சாதகத்தை பெறுவார்கள். இருப்பினும் ஹைதராபாத் போல இங்கு நல்ல பவுன்ஸை எதிர்பார்க்க முடியாது.

இதையும் படிங்க: அதை பற்றி கவலைப்படாமல் நாட்டுக்காக ஆடும் அவருக்கு சல்யூட் பண்றேன்.. இர்பான் பதான் பாராட்டு

எனவே கடைசி 2 நாட்களில் ஸ்பின்னர்கள் அதிக ஆதிக்கத்தை செலுத்துவார்கள். இந்த மைதானத்தில் 478, 343, 263, 174 என்பது 4 இன்னிங்ஸ்களின் சராசரி ஸ்கோராகும். இங்கு இதற்கு முன் நடந்த 2 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement