WTC Final : 8 வருஷமா அவங்களுக்கு நேரம் சரியில்ல. அதனால் கண்டிப்பா இந்தியா தான் ஜெயிக்கும் – புள்ளிவிவரங்கள் கூறுவது என்ன?

Rohit-and-Cummins
- Advertisement -

ரசிகர்களின் மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது தற்போது இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியினை நோக்கி நகர்ந்துள்ளது. ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணியானது தற்போது அடுத்ததாக இந்த ஆண்டு இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ளது.

IND vs AUS

- Advertisement -

அந்த வகையில் ஜூன் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தற்போது முழுவீச்சில் தயாராகி வருகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதால் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த இறுதிப்போட்டி நடைபெறும் ஓவல் மைதானம் எந்த அணிக்கு சாதகமாக இருக்கும்? எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் இந்த இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு உலகின் நம்பர் 1 இடத்தை பிடித்திருந்த வேளையில் விராட் கோலிக்கு பிறகு ரோகித் சர்மாவின் தலைமையிலும் தொடர்ச்சியாக இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது.

அதிலும் குறிப்பாக கடந்த எட்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி மிகச் சிறப்பான ரெக்கார்டை வைத்துள்ளது. அதன்படி கடந்த எட்டு ஆண்டுகளாகவே ஆஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணிலும் சரி, வெளியிலும் சரி இந்திய அணி தொடர்ச்சியாக வீழ்த்தி வருகிறது, கடந்த எட்டு ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிராக அவர்கள் ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்ற முடியாமல் தடுமாறி வருகின்றனர். அதேபோன்று லண்டன் ஓவல் மைதானத்திலும் ஆஸ்திரேலியா அணி பெற்றுள்ள வெற்றி சதவீதமானது 140 வருடங்களாக மிகவும் மோசமாக இருந்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் கடந்த 1880-ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி தற்போது வரை அந்த மைதானத்தில் 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அவர்களது வெற்றி சதவீதம் இந்த மைதானத்தில் 18.42 மட்டுமே என்பதனால் அவர்கள் நிச்சயம் இந்த மைதானத்தில் பெருமளவு தடுமாற்றத்தை கண்டுள்ளனர் என்பேது தெளிவாகியுள்ளது. அதோடு கடந்த 50 ஆண்டுகளில் இந்த மைதானத்தில் அவர்கள் இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க : WTC Final : ஓவல் மைதானத்தில் ரன் அடிக்கனும்னா இதை செய்ஞ்சே ஆகனும். மிகப்பெரிய சவால் தான் – ரோஹித் சர்மா ஓபன்டாக்

அதேவேளையில் இந்திய அணியை பொறுத்தவரை கடைசியாக 2021-ஆம் ஆண்டு பலம்வாய்ந்த இங்கிலாந்து அணியையே இந்த ஓவல் மைதானத்தில் வீழ்த்தியுள்ளதால் நிச்சயம் ஓவல் மைதானத்தில் இந்திய அணியால் எளிதாக ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே நிச்சயம் இந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வாய்ப்பில்லை என்றும் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement