WTC Final : ஓவல் மைதானத்தில் ரன் அடிக்கனும்னா இதை செய்ஞ்சே ஆகனும். மிகப்பெரிய சவால் தான் – ரோஹித் சர்மா ஓபன்டாக்

Rohit Sharma
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டிக்காக இங்கிலாந்து சென்றடைந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தற்போது தீவிர பயிற்சியியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்த இறுதிப்போட்டியானது வரும் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் விளையாட தற்போது தயாராகி வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இறுதி போட்டிக்கு முன்பாக நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ், நியூசிலாந்து முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் மற்றும் இங்கிலாந்து ஜாம்பவான் இயான் பெல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்த இறுதிப்போட்டியில் விளையாடுவது குறித்து பேசிய ரோகித் சர்மா பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : பொதுவாகவே இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் ரன்களை குவிக்க பேட்ஸ்மன்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும். இங்கு நீங்கள் நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே ரன்களை சேர்க்க முடியும். ஏனெனில் எவ்வளவு நேரம் நாம் இந்த மைதானத்தில் நேரத்தை எடுத்துக் கொள்கிறோமோ அதன் பின்னர்தான் பவுலர்களை எதிர்கொள்ளும் போது ரன் குவிக்க நல்ல எண்ணத்தை பெறுவீர்கள்.

rohith 6

அந்த வகையில் இந்த மைதானத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனாலும் டி20 கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பேட்டிங்கை மாற்றுவது மிகவும் கடினம். அதேபோன்று இங்கு நிறைய ரன் குவித்தவர்களின் மாடலை நாங்கள் பின்பற்ற விரும்பவில்லை.

- Advertisement -

அதேசமயம் அவர்கள் எவ்வாறு ரன்களை குவித்தார்கள் என்ற பேட்டர்னை தெரிந்து கொள்வது அவசியம். ஓவல் மைதானத்தில் நான் பார்த்த விஷயம் ஒன்றுதான் இங்குள்ள மைதானத்தின் பவுண்டரிகளின் அளவுகள் சிறியது எனவே அதற்கு ஏற்றார் போல் நமது பேட்டிங்கை தகவமைத்து அந்த ஸ்கோரிங் இடங்களில் ரன்களை குவிக்க வேண்டியது அவசியம். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை நம்முடைய பேட்டிங் நுட்பத்தை கண்டிப்பாக நாம் மாற்றியமைக்க வேண்டும்.

இதையும் படிங்க : IPL 2023 : ஐ.பி.எல் தொடரில் எனது ஆட்டம் சிறப்பாக அமைந்ததற்கு காரணமே இதுதான் – சாய் சுதர்சன் பேட்டி

அப்போதுதான் நம்மால் இங்கு சிறப்பாக ரன்களை குவிக்க முடியும். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகவே இந்திய அணி சிறப்பான வெற்றிகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்றுள்ளது. இந்த நம்பிக்கையை இளம் வீரர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களையும் சிறப்பாக விளையாட வைக்க முடியும் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement