IND vs AUS : இந்தியா ஆஸ்திரேலியா ஒன் டே மேட்சை சேப்பாக்கத்தில் நேரில் பாக்கணுமா? – டிக்கெட் விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் கடைசி போட்டியானது தற்போது மார்ச் 9-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் வேளையில் இந்த டெஸ்ட் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

IND vs AUS

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளதால் இந்த கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதனை தொடர்ந்து டெஸ்ட் தொடரில் கிடைக்கும் வெற்றியை அப்படியே ஒருநாள் தொடரிலும் தொடர வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 17-ஆம் தேதி துவங்குகிறது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து போட்டிகள் நடைபெற உள்ள வேளையில் இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Chepauk

ஏற்கனவே மைதான கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பு என பல்வேறு பணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் அங்கு போட்டிகள் நடக்காமல் இருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த விடயம் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதோடு இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் என்பதனால் தற்போது டிக்கெட் விற்பனைக்கான தேதியையும், விலையையும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மார்ச் 13-ஆம் தேதியும், நேரடியாக டிக்கெட் விற்பனை 18-ஆம் தேதியும் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கத்துக்குட்டி அவங்களால ஒன்னும் சாதிக்க முடியாது, ஃபைனல் நமக்கு தான் – மட்டமாக பேசிய மஞ்ரேக்கரை விளாசும் இந்திய ரசிகர்கள்

அதேபோன்று இந்த போட்டிக்கான டிக்கெட்டின் விலை குறைந்தபட்சம் 1200-ரூபாயில் இருந்து அதிகபட்சம் 10,000-ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement