கத்துக்குட்டி அவங்களால ஒன்னும் சாதிக்க முடியாது, ஃபைனல் நமக்கு தான் – மட்டமாக பேசிய மஞ்ரேக்கரை விளாசும் இந்திய ரசிகர்கள்

Sanjay
- Advertisement -

வரலாற்றின் 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்கு தகுதி பெற டெஸ்ட் அந்தஸ்து பெற்ற உலகின் டாப் அணிகள் கடந்த 2021 முதல் லீக் சுற்றில் மோதி வருகின்றன. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள அந்த லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முதல் 2 போட்டிகளில் தோற்றாலும் 3வது போட்டியில் முக்கிய வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது.

மறுபுறம் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா கடைசி போட்டியில் வென்று நிச்சயம் ஃபைனலுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் இலங்கை மார்ச் 9ஆம் தேதியன்று நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் துவங்கியுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் வென்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறுவதற்கு 50% வாய்ப்புள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
எஞ்சிய 50% வாய்ப்பு தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை சந்திப்பதில் காத்திருக்கிறது. அத்துடன் ஒருவேளை அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை குறைந்தது ஒரு தோல்வி அல்லது ஒரு டிராவை சந்தித்தால் கூட இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்று விடும். அந்த நிலையில் நடப்பு டெஸ்ட் சாம்பியனாக இருக்கும் நியூசிலாந்து ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவ விட்டாலும் தங்களது சொந்த மண்ணில் இலங்கை போன்ற ஆசிய அணிக்கு எதிராக நிச்சயம் தோற்பதற்கு 90% வாய்ப்பில்லை.

அதன் காரணமாக அனைத்து வழிகளிலும் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெற 90% பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் 2 – 0 (2) என்ற கணக்கில் தோற்கடிக்கும் அளவுக்கு இலங்கையிடம் திறமை இல்லாததால் நிச்சயம் இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உலகின் மிகப்பெரிய மைதானத்தில் துவங்கியுள்ள இந்த 4வது டெஸ்ட் போட்டி மிகச் சிறந்த துவக்கத்தை பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் ஒவ்வொரு இருக்கையிலும் ரசிகர்கள் அமர்ந்திருப்பதை பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. அதே போல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலை இந்தியா நெருங்கியுள்ளது. அதை இந்தியா முழுமையாக அடையும் என்று நினைக்கிறேன்”

“அத்துடன் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்கும் அளவுக்கு இலங்கையிடம் திறமையில்லை என்று நினைக்கிறேன். எனவே இந்தியா பைனலுக்கு தகுதி பெற்று விட்டதாகவே நான் நம்புகிறேன். இருப்பினும் அது அதிகாரப்பூர்வமாக உறுதியாகும் வரை பதற்றம் இருக்கத்தான் செய்யும்” என்று கூறினார். அதாவது தற்போது இலங்கை கத்துக் குட்டியாக செயல்பட்டு வருவதால் நிச்சயம் நியூசிலாந்தை தோற்கடிக்காது என்று சஞ்சய் மஞ்ரேக்கர் குறைத்து மதிப்பிட்டு மட்டமாக பேசியுள்ளார்.

- Advertisement -

ஆனால் கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதுடன் வரலாற்றில் பலமுறை கத்துக் குட்டிகள் என்று கருதப்பட்ட அணிகள் பெரிய அணியை சாய்த்த கதைகளை பார்த்துள்ளோம். அதனால் இந்தியா சிறப்பாக விளையாடி ஃபைனலுக்கு செல்லும் என்று சொல்லுங்கள் ஆனால் இலங்கையை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று இந்திய ரசிகர்கள் அவருக்கு கருத்துக்கு அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க:IND vs AUS : இந்தியாவுல தான் இந்த கொடும நடக்குது, எங்களை குழப்ப இப்படி பண்றிங்களா? மார்க் வாக் கோபம் – காரணம் என்ன

சொல்லப்போனால் வரலாற்றில் பலமுறை அவர் கூறிய கணிப்புகளுக்கு எதிரான முடிவுகளே நடந்துள்ளது. அந்த வகையில் நியூசிலாந்துக்கு எதிரான இந்த தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இலங்கை முதல் நாள் முடிவில் 305/6 ரன்கள் குவித்து வலுவான தொடக்கத்தை பெற்றுள்ளது. அதனால் தயவு செய்து இந்த கருத்தை வாபஸ் பெற்று வாயை கழுவுங்கள் என்று சஞ்சய் மஞ்ரேக்கரை இந்திய ரசிகர்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.

Advertisement