
ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தது. அந்த தொடரினை ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருந்த வேளையில் அடுத்ததாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியானது 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை அக்டோபர் 29-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. டி20 சாம்பியனான இந்திய அணியும், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியும் இந்த தொடரில் மோத இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் இந்த டி20 தொடரானது இந்திய நேரத்தில் எத்தனை மணிக்கு தொடங்கும்? எந்தெந்த தேதிகளில் போட்டிகள் நடக்கிறது? எந்த சேனலில் இந்த தொடரை கண்டு களிக்கலாம்? என்பது குறித்த சில பிரத்யேக தகவல்களை இங்கே நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம். அதன்படி இந்த டி20 தொடரானது இந்திய நேரப்படி மதியம் 1:45 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டி20 தொடருக்கான டாஸ் 1:15க்கு போடப்பட்டு அரை மணிநேர இடைவெளிக்கு பின்னர் 1:45க்கு போட்டிகள் துவங்கும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த முதல் டி20 போட்டி நாளை அக்டோபர் 29-ஆம் தேதி கான்பரா மைதானத்தில் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டி அக்டோபர் 31-ம் தேதி மெல்போன் நகரிலும், மூன்றாவது டி20 போட்டி நவம்பர் 2-ஆம் தேதி ஹோபர்ட் நகரிலும், நான்காவது போட்டி நவம்பர் 6-ஆம் தேதி கோல்டு கோஸ்ட் மைதானத்திலும், ஐந்தாவது போட்டி நவம்பர் 8-ஆம் தேதி காபா மைதானத்திலும் நடைபெற உள்ளது. இந்த தொடரின் அனைத்து போட்டிகளுமே இந்திய நேரப்படி மதியம் 1:45 மணிக்கு தொடங்கும்.
இதையும் படிங்க : இம்முறை ஆஸ்திரேலிய மண்ணில் எங்களுடைய டி20 அணி அசத்தலாக விளையாடும்.. காரணத்தை கூறிய – சூரியகுமார் யாதவ்
அதேபோன்று இந்த டி20 தொடரின் ஒளிபரப்பு உரிமைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமே கைப்பற்றியுள்ளதால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் இந்த தொடரை கண்டு களிக்கலாம். அதேபோன்று ஆன்லைனில் இந்த தொடரை காண வேண்டும் என்றால் ஜியோ ப்ளஸ் ஹாட் ஸ்டார் மூலம் இந்த தொடரை கண்டுகளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.