இம்முறை ஆஸ்திரேலிய மண்ணில் எங்களுடைய டி20 அணி அசத்தலாக விளையாடும்.. காரணத்தை கூறிய – சூரியகுமார் யாதவ்

SKY
- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரினை ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் இழந்த இந்திய அணியானது அடுத்ததாக அந்த அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இம்முறை டி20 இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அசத்தும் : சூரியகுமார் யாதவ் நம்பிக்கை

இந்த டி20 போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் ஒருநாள் தொடரில் இடம் பெற்றிருந்த வீரர்கள் டி20 போட்டிகளிலும் விளையாடும் பட்சத்தில் அவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். அதனை தவிர்த்து எஞ்சியுள்ள டி20 வீரர்கள் அனைவரும் ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சென்று விட்டனர்.

- Advertisement -

எதிர்வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை மறுதினம் துவங்கவுள்ள வேளையில் இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும்? என்பது குறித்து டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : நாங்கள் கடந்த முறை இங்கு வந்து விளையாடியதை விட இம்முறை சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறேன். ஏனெனில் ஆஸ்திரேலியாவிற்கு நாங்கள் நிறைய முறை சென்றுள்ளோம். டி20 போட்டிகளிலும் கடந்த 2020-ஆம் ஆண்டு இங்கு வந்து விளையாடி இருக்கிறோம். தற்போதுள்ள ஆஸ்திரேலிய மைதானங்களை போல இந்தியாவிலும் பல மைதானங்கள் உள்ளன.

- Advertisement -

எனவே இங்கு விளையாடுவதில் பெரிய வித்தியாசம் இருக்காது. நாங்கள் இந்த தொடருக்காக வித்தியாசமாக தயாராக வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இந்திய அணியின் கேப்டனாக இன்னொரு நாட்டிற்கு நான் எப்பொழுதும் சொல்வேன் என்று நினைத்து கூட பார்த்தது கிடையாது. தற்போதைய இந்திய அணி மிகச் சிறப்பான அணியாக உள்ளதால் நிச்சயம் இம்முறையும் நாங்கள் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவோம்.

இதையும் படிங்க : இந்தவொரு விடயம் போதாதா? அடுத்த வேர்ல்டுகப்புக்கு அவங்க 2 பேருமே ரெடி – சுனில் கவாஸ்கர் கருத்து

இந்திய அணிக்காக சாம்பியன் பட்டத்தினை வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய ஆசையாக இருந்தது. ஆனால் தற்போது நான் கேப்டனாகவும் ஆஸ்திரேலியா பயணித்திருப்பது வேடிக்கையாக உள்ளதாகவும் சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement