- Advertisement -
இந்திய கிரிக்கெட்

311 ரன்ஸ்.. ஆஸியை அடக்க போராடும் இந்தியா.. ஹெட்டை அவுட்டாக்கி பும்ரா சாதனை.. கோலி ஸ்பெஷல் சாதனை

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் அந்தத் தொடரின் நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் அதிரடியாக விளையாடிய ரன்களை குவித்தார். குறிப்பாக நம்பர் ஒன் பவுலராக திகழும் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு எதிராக 3 வருடங்கள் கழித்து சிக்ஸரையும் ஒரே ஓவரில் அதிக ரன்கள் (18) குவித்த வீரராகவும் அவர் சாதனை படைத்தார். தொடர்ந்து அசத்தலாக விளையாடிய அவர் அரை சதமடித்து 60 ரன்கள் குவித்து ஜடேஜா சுழலில் சிக்கினார்.

- Advertisement -

பும்ரா அசத்தல்:

அதன் வாயிலாக ஆஸ்திரேலியாவுக்காக இரண்டாவது இளம் வயதில் அரை சதத்தை அடித்த வீரராகவும் அவர் சாதனையுடன் வெளியேறினார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய உஸ்மான் கவாஜா தம்முடைய பங்கிற்கு அரை சதமடித்து 57 ரன்கள் குவித்த போது பும்ரா வேகத்தில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்த மார்னஸ் லபுஸ்ஷேன் நேர்த்தியாக விளையாடி அரை சதமடித்து 72 ரன்கள் எடுத்த போது வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கினார்.

அடுத்ததாக இந்தியாவுக்கு மிகப்பெரிய தொல்லையை கொடுக்கக்கூடிய டிராவிஸ் ஹெட் நிதானமாக விளையாட முயற்சித்த போது பும்ரா வேகத்தில் 0 ரன்களில் கிளீன் போல்டானார். அதன் வாயிலாக டிராவிஸ் ஹெட்டை டக் அவுட்டாக்கிய முதல் இந்திய பவுலர் என்ற பெருமையான சாதனையை பும்ரா படைத்தார். அதோடு நிற்காத பும்ரா அதற்கடுத்ததாக வந்த மிட்சேல் மார்ஷை 4 ரன்களில் அவுட்டாக்கி அசத்தினார்.

- Advertisement -

விராட் கோலியும் சாதனை:

மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய ஸ்மித் அரை சதமடித்து சவாலை கொடுத்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய அலெக்ஸ் கேரி 31 ரன்களில் ஆகாஷ் தீப் வேகத்தில் அவுட்டானார். இறுதியில் நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 311-6 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஸ்டீவ் ஸ்மித் 68*, பட் கமின்ஸ் 8* ரன்களுடன் உள்ளனர்.

இதையும் படிங்க: லெவல் 1 இல்ல.. விராட் கோலி செய்தது அதைவிட பெரிய தப்பு.. அவருக்கு காத்திருக்கும் தண்டனை இதுதான்

அந்த வகையில் இப்போட்டியில் கம்பேக் கொடுக்க இந்திய அணி முயற்சித்து வருகிறது. முன்னதாக இப்போட்டியில் மார்னஸ் லபுஸ்ஷேன் கொடுத்த கேட்ச் உட்பட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி மொத்தம் 72 கேட்ச்களை பிடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிரான அதிக கேட்சுகள் பிடித்து ஆசிய வீரர் என்ற சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கையின் மகிளா ஜெயவர்த்தனேவும் 72 கேட்ச்கள் பிடித்துள்ளார்.

- Advertisement -