IND vs AUS : 2 ரன்னுக்கு 3 விக்கெட் விழுந்தப்போ விராட் கோலி என்கிட்ட சொன்னது இதுமட்டும் தான் – கே.எல் ராகுல் பேட்டி

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றிகரமாக துவங்கியுள்ளது.

அதன்படி இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்களை மட்டுமே குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக வார்னர் 41 ரன்களையும், ஸ்டீவன் ஸ்மித் 46 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெடுகளை இழந்தாலும் அதன் பின்னர் விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 41.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கோலி 85 ரன்களில் ஆட்டம் இழந்தாலும் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய கே.எல் ராகுல் கூறுகையில் : இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட் விழுந்த போது நான் உள்ளே வருகையில் பெரிய அளவில் எனக்கும் விராட் கோலிக்கும் இடையே உரையாடல்கள் நடைபெறவில்லை. நான் சற்று நிதானித்து ஒரு இடைவெளிக்கு பின்னர் அடிக்கலாம் என்று நினைத்தேன். அதனால் கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுத்தி கொண்டேன்.

- Advertisement -

அதே வேளையில் விராட் என்னிடம் வந்து இந்த விக்கெட்டில் என்னவோ இருக்கிறது எனவே சிறிது நேரம் நாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது போன்று விளையாடலாம் என்று எனக்கு அறிவுரை வழங்கினார். அவர் கூறியபடியே நானும் விளையாட துவங்கினேன். அதன்படி மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சரி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சரி சற்று சாதகம் இருந்தது. அதன் பின்னர் கடைசி 15-20 ஓவர்களில் பனிப்பொழிவு இருந்ததன் காரணமாக அது எங்களுக்கு மிகவும் உதவியது. பந்து நன்றாக பேட்டுக்கும் வந்தது.

இதையும் படிங்க : IND vs AUS : 2/3 என சரிந்தும்.. ஆஸிக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்தியா.. வரலாறு காணாத சரித்திர சாதனை வெற்றி

இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தாலும் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் ரன்கள் வரும் என்று உணர்ந்தே விளையாடினோம். கடைசி கட்டத்தில் நான் 100 ரன்களை கணக்கிட்டு ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடிக்க நினைத்தேன். ஆனால் இறுதியில் சிக்ஸ் சென்றதும் எனக்கு வருத்தமாக இல்லை ஏனெனில் அணியின் வெற்றி தான் சதத்தை விட முக்கியம் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement