- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸி 405 ரன்ஸ்.. ஹெட் 14க்கு 14.. ரோஹித் படுமோசமான கேப்டன்ஷிப்.. இந்தியாவை மழை காப்பாற்றுமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. ஆனால் 2வது போட்டியில் ரோகித் தலைமையில் மோசமாக விளையாடிய இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்தது. அந்தப் நிலையில் மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் துவங்கியது.

அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்த களம் இறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு துவக்க வீரர்கள் கவாஜா 21, மெக்ஸ்வீனி 9 ரன்களில் பும்ரா வேகத்தில் அவுட்டானார். அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 12 ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் – டிராவிஸ் ஹெட் ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்கள் சேர்த்தார்கள்.

- Advertisement -

மோசமான கேப்டன்ஷிப்:

அவர்களைப் பிரிக்க முடியாமல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா திணறி நின்றார். அதை பயன்படுத்தி இந்தியாவை வெளுத்து வாங்கிய அந்த ஜோடியில் டிராவிஸ் ஹெட் சதமடித்து மிரட்டினார். இத்தனைக்கும் காபா மைதானத்தில் கடைசியாக விளையாடிய 3 இன்னிங்ஸில் கோல்டன் டக் அவுட்டான அவர் இம்முறை சுமாராக பந்து வீசிய ரோகித் தலைமையிலான இந்தியாவை அடித்து நொறுக்கி சதமடித்தார்.

அவருடன் சேர்ந்து 241 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்மித் 535 நாட்கள் கழித்து சதமடித்தார். அவரை 101 ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா மறுபுறம் வெளுத்து வாங்கிய ஹெட்டையும் 152 ரன்களில் அவுட்டாக்கினார். அடுத்ததாக வந்த மிட்சேல் மார்ஷை 5 ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா கொஞ்சம் ஆறுதலை கொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் கம்மின்ஸ் 20 ரன்களில் அவுட்டானாலும் கேரி 45*, ஸ்டார்க் 7* ரன்கள் எடுத்துள்ளார்கள். அதனால் 2வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 405-7 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

மழை காப்பாற்றுமா:

முன்னதாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் சதமடித்து இந்தியாவை தோற்கடித்த ஹெட் கடந்த போட்டியை போல இப்போட்டியிலும் சதமடித்துள்ளார். ஆச்சரியப்படும் வகையில் அந்த 4 போட்டிகளிலுமே ரோஹித் சர்மா இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஆனால் மற்ற இந்திய கேப்டன்கள் தலைமையில் இந்தியாவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட் ஒருமுறை கூட சதத்தை அடித்ததில்லை.

இதையும் படிங்க: என்னை பாத்தாலே டேவிட் வார்னருக்கு அந்த பயம் இருக்கும்.. என்னை பாக்ககூட மாட்டாரு – புஜாரா சுவாரசியம்

இதிலிருந்து ரோகித் சர்மா மிகவும் மோசமாக கேப்டன்ஷிப் செய்வது தெளிவாக தெரிகிறது. மேலும் இதுவரை டிராவிஸ் ஹெட் சதமடித்த 14 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தோற்றதில்லை. அதனால் இந்த போட்டியில் இந்தியாவை மழை மட்டுமே தோல்வியிலிருந்து காப்பாற்ற முடியும் என்று சொல்லலாம். 3, 4, 5வது நாளில் காபாவில் மழை பெய்ய சராசரியாக 80% வாய்ப்புள்ளதால் அதை மட்டுமே இந்திய ரசிகர்கள் தற்போது நம்பியுள்ளனர்.

- Advertisement -